பவர்பாயிண்ட் ஸ்லைடு உருவாக்க ஒரு ஏ.ஐ பாட்!

பவர்பாயிண்ட் ஸ்லைடு உருவாக்க ஒரு ஏ.ஐ பாட்!

ரையாடல் மற்றும் உருவாக்க ஏ.ஐ மென்பொருள்கள் இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் நிலையில், பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை உருவாக்குத் தரும் திறன் படைத்த ஏ.ஐ மென்பொருள் சேவை அறிமுகம் ஆகியுள்ளது.

சாட்பிசிஜி (ChatBCG, ) எனும் இந்த ஏ.ஐ மென்பொருள், பயனாளிகள் சமர்பிக்கும் உள்ளடக்கத்திற்கு ஏற்ற ஸ்லைடுகளை உருவாக்கித்தருகிறது.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு முனைவர் பட்ட மாணவர்கள் சிலாஸ் அல்பெர்டி மற்றும் ஜோசப் செம்ராஜ் ( Silas Alberti and Joseph Semrai ) உருவாக்கியுள்ள இந்த சேவைக்கான இணையதளத்தில் (https://www.chatbcg.com/) குறிப்பிட்ட தலைப்பு அல்லது காட்சி விளக்கத்திற்கான கோரிக்கையை சமர்பித்தால், அவற்றுக்கான ஸ்லைடுகளை உருவாக்கித்தருகிறது.

ஸ்லைடுகளுக்கான தோற்றம், பின்னணி, புல்லட் புள்ளிகள் உள்ளிட்டவற்றையும் பயனாளிகள் அணுகலாம். பிடிஎப் வகை கோப்புகளையும் கொண்டு வந்து ஸ்லைடுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த சேவை செயல்படும் விதத்தை விளக்கும் உதாரணங்களும் தளத்தில் இடம் பெற்றுள்ளன.

சாட் ஜிபிடி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஸ்லைடு மென்பொருள் அறிமுகம் ஆகி ஏ.ஐ திறன் பற்றி மேலும் வியக்க வைக்கிறது.

சைபர்சிம்மன்

Related Posts