அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர்- ஓ பன்னீர் அறிவிப்பு!

அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர்- ஓ பன்னீர் அறிவிப்பு!

தமிழகத்தின் வர இருக்கும் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் 50 நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது இல்லங்களில் தங்களது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மாறி மாறி நடைபெற்ற ஆலோசனையானது அதிகாலை 3 மணி வரை நீடித்தது எனவும் கூறப்பட்டு வருகின்றது. அமைச்சர்கள் இரு தரப்பினருடன் இன்று காலை வரை நடத்திய ஆலோசனை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு இன்று அதிகாலை அளித்த பேட்டியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான விடை இன்று காலை 10 மணிக்கு கிடைக்குமெனவும்,அதிமுக தேர்தலில் களமிறங்குகுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் நடந்து வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இதை அடுத்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து  துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “ செயற்குழுவில் முடிவெடுத்தப்படி வழிக் காட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பிடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். 2020-21 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் இணை ஒருங்கிணைப்பாளர் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கியுள்ளார். முன்னதாக ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையின் படி, எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுகவுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அதன்படி 1. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

2. அமைச்சர் தங்கமணி

3. அமைச்சர் எஸ் பி வேலுமணி

4. அமைச்சர் ஜெயக்குமார்

5. அமைச்சர் சிவி சண்முகம்

6. அமைச்சர் காமராஜ்

7. கே.சி.டி.பிரபாகரன்

8. மனோஜ் பாண்டியன்

9. பா மோகன்

10. கோபாலகிருஷ்ணன்

11. சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் பெயர்களை அரிவித்தார்.,

இந்த அறிவிப்பைக் கேட்ட தொண்டர்கள் பலர் ஆடிப் பாடி லட்டு பகிர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடினர்

error: Content is protected !!