நாங்குநேரி & விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாங்குநேரி & விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர். அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ள முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் . நாங்குநேரி தொகுதியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக உள்ள ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளராக நா.புகழேந்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதிமுக சார்பாக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் படி விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் என்பவரும், நாங்கு நேரியில் வெ.நாராயணன் என்பவரும் அதிமுக சார்பாக போட்டியிடுவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

முத்தமிழ்செல்வன் விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றிய செயலாளராக இருப்பவர். அதே போல் வெ.நாராயணன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி,ஆர். மன்ற இணைச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!