பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு!

இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு, பிப்ரவரி 4ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பரப்புரை பணிகளை முறைப்படுத்தவும், தேர்தல் அறிக்கையை தயாரிக்கவும் 3 குழுக்களை அதிமுக அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். அதில், மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக தலைமைக் கழகத்தில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!