தமிழ் குரல் / AI Voice
திமுகவின் செயற்குழு கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் பின்வருமாறு:
1. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு மாநில அரசு துணைபோனதாக கண்டித்தும் தீர்மானம்
2. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுகவுடன் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட வலியுறுத்தி தீர்மானம்
3. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தீர்மானம்.
4. நியூட்ரினோ திட்ட அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என தீர்மானம்.
5. மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை புறக்கணிப்பதற்கு கண்டன தீர்மானம்
6. நேர்மையற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்யக்கோரி தீர்மானம்.
7. ஈரோட்டில் நடைபெற்ற திமுக மண்டல மாநாடு வெற்றி பெற்றதற்கான பாராட்டு தீர்மானம்.
இவ்வாறு 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடிசினல் ரிப்போர்ட்:
மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ம் தேதி அதிமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலை நகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிச்சார்.

