நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நேரில் அழைத்து எச்சரித்த மோடி!

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நேரில் அழைத்து எச்சரித்த மோடி!

2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வரிசையில், அபிஜித் பானர்ஜி இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்தவர். இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது எனவும், அதன் பிரச்னையை அரசு உணர்ந்தாலும் அதைவிட வேகமாக பொருளாதாரம் மோசமாக சென்றுக் கொண்டிருக்கிறது எனவும் அபிஜித் விமர்சிருந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து எதிர்ப்பு கருத்துகளை நான் கூறுவதற்காக ஊடகங்கள் வலைவிரிப்பதாக, மோடி என்னை வேடிக்கையாக எச்சரித்தார் என நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியால் நம் நாடு பெருமை பெற்றுள்ளது என பெருமைப் பட்டிருந்தார். நோபல் பரிசை வென்ற பின் அவர் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் படித்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் ஆகியவற்றில் அவர் பங்கேற்று வருகிறார்.அதன்படி இந்திய பொருளாதாரம் மற்றும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்த அவரது கருத்துகள் ஆளுங்கட்சியின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் அபிஜித் பானர்ஜி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.  அபி ஜித் பானர்ஜியுடனான தன் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘‘அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. மனித சமுதாயத்தை மேம்படுத்துவதில் அவருக்குள்ள ஆர்வம் தெளிவாக தெரிகிறது. எங்கள் இருவரிடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆரோக்கியமான விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரது சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது. அவரது சிறந்த எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்கள்’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதே சமயம் பிரதமர் மோடியுடனான தன் சந்திப்பு குறித்து அபிஜித் பானர்ஜி வெளியிட்ட செய்தியில், “இந்தியா குறித்த பிரதமர் மோடியின் சிந்தனை தனித்துவமாக உள்ளது. பெரும்பாலும் கொள்கைகள் பற்றி மட்டும் தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த கொள்கையின் பின்னணியில் இருக்கும் சிந்தனைகள் பற்றி அறிவதற்கான வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும்.
அரசாட்சி பற்றிய தன் கண்ணோட்டம் குறித்து பிரதமர் மோடி பேசினார். அரசாட்சி மீதான மக்களின் அவநம்பிக்கை. அதனால் சில ஆளுமைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அரசாட்சி அமைவது. இவை பொறுப்பான அரசாங்கமாக இருக்காது.

எனவே மக்களுக்கான பொறுப்பான அரசாங்கத்தை உருவாக்க தான் மேற்கொள்ளும் சீர்திருத்தங் கள் குறித்து மிக அழகாக பிரதமர் மோடி எடுத்துரைத்தார். அரசு நிர்வாகத்தில் மக்களின் கருத்துக் களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்தியாவில் பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கையுடன் தொடர்புடைய அரசாட்சியை உருவாக்குவது மிகவும் அவசியம். இல்லையென்றால் பொறுப்பான ஒரு அரசாட்சி நமக்கு கிடைக்காது”என அபிஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!