அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!- வீடியோ

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!- வீடியோ

புதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திங்கள் அன்று காலை அபுதாபியில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் மற்றும் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட, ட்ரோன் மூலம் நடந்த தாக்குதல் காரணம் என அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பான ஹவுத்தி இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து செயல்படும் அமைப்பாக இந்த ஹவுத்தி அமைப்பு அறியப்பட்டு வருகிறது. சவூதி அரேபியா மீது ஹவுத்தி அமைப்பு பலமுறை எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாகக் கடந்த காலங்களில் பல முறை இந்த அமைப்பு அச்சுறுத்திவந்த நிலையில், இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக, அபுதாபி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியது. தற்போது தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணையை ஐக்கிய அரபு அமீரகம் தொடங்கியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பலை ஹவுத்திகள் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு அபுதாபியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கைப்பற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கப்பல் மற்றும் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!