கேரள உள்ளாட்சி தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி அபார வெற்றி!

கேரள உள்ளாட்சி தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி  அபார வெற்றி!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 8-ம்தேதி முதல் கட்ட தேர்தலும், 10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும், 14-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடை பெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76 சதவீதம் பதிவான நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரிகள் கூட்டணி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமை யிலான யுடிஎஃப் 2-வது இடத்திலும், பா.ஜனதா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது….. 941 கிராம பஞ்சாயத்து இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 516 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 375 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 22 இடங்களிலு்ம முன்னணியில் உள்ளது. ஆறு மாநகராட்சி இடங்களில் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி தலா மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து, முதல்வர், பினராயி விஜயன், “இது மாநில மக்களின் வெற்றி. முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்ற இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் தோல்வியைச் சந்தித்துள்ளன. அந்த இடங்களில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, வரலாற்றை மாற்றியுள்ளது. மாநிலத்தில் இடதுசாரி கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. மதச்சார்பின்மையைப் பாதுகாத்து வருவது, வளர்ச்சியை முன்னெடுத்து வருவது ஆகியவற்றின் காரணமாகவே இடதுசாரி கூட்டணிக்கான மக்களின் ஆதரவு பெருகியுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் வலுவிழந்துள்ளதைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன” என்றார்.

பெருவாரியான வெற்றி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு அமோக வெற்றியை அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்பின் அனைத்து நிலைகளிலும் இடதுசாரி கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!