Skip to content
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web
  • About Us
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
    • Privacy Policy
    • Terms and Conditions
  • Contact Us
  • Home
  • உலகம்
  • ஃபேஸ்புக் அடிமைகள் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க!

ஃபேஸ்புக் அடிமைகள் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க!

  • admin
  • May 7, 2017
  • உலகம்
ஃபேஸ்புக் அடிமைகள் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க!
0
SHARES
ShareTweet

பல சினிமாக்களில் சொல்வது போல், ”பேங்க் அக்கவுண்ட் இல்லாட்டாலும் ஃபேஸ்புக்-கில் ரெண்டுக்கு அதிகமான அக்கவுண்ட் வச்சிருக்கறதுதான் ஃபேஷன்” என்பது உண்மையாகி விட்ட நிலையில் தற்போது சர்வதேச அளவில் மொத்த மக்கள் தொகையில், நான்கில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளனர் என்ற தக்வல் வெளியாகியுள்ளது .

facebook may 7

கூகுள் தளத்திற்கு கூட போகாமல் ஒருவரால் இருக்கலாம். ஆனால் ஃபேஸ்புக் போகாமல் மட்டும் யாராலும் இருந்துவிட முடியாது என்ற நிலைமையே தற்காலத்தில் உள்ளது. இன்று இணையதள உலகில் 20 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் தனது ஆதிக்கத்தை ஃபேஸ்புக் செலுத்துகிறது. அந்த அளவுக்கு ஃபேஸ் புக் எல்லோரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

உலகிலுள்ள 14 பேரில் ஒருவர் ஃபேஸ் புக் கணக்கு வைத்துள்ளனர். 52.கோடி மக்கள் மாதமொன்றுக்கு 70 ஆயிரம் கோடி நிமிடங்களை இணையத்தளத்தில் செலவழிக்கின்றனர் என ஆய்வு கூறுகிறது. 15 கோடி பேர் தமது மொபைல்களில் ஃபேஸ் புக் இணைப்பைக் கொண்டுள்ளனர். ஒருவரது கணக்கில் சராசரியாக 130 நண்பர்கள் உலகளவில் வயது வித்தியாசமின்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற வலையமைப்பு எதுவென்றால் அதற்கு பதில் ஃபேஸ் புக் என்பதாகத்தான் இருக்க முடியும்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில்,ஃபேஸ் புக்கின் மாதாந்திர பார்வையாளர்கள் விகிதம் 200 கோடிக்கும் அதிகமானோர் என தெரியவந்துள்ளது. சீனாவில் ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளங்கள் தடைசெய்யப்பட்ட பிறகும் ஃபேஸ் புக் கணக்காளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக வாட்ஸ்அப் கணக்காளர்களும், அதைத்தொடர்ந்துதான் யூடியுப், மெசஞ்சர் இன்ஸ்டாகிராம் என வரிசைக் கட்டி வருகிறது.

இதனிடையே ஃபேஸ்புக் லைவ் வீடியோ வசதியை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் கொலை மற்றும் தற்கொலை செய்வதை லைவ் வீடியோவாக கொலையாளிகள் ஒளிபரப்பி சகல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இது குறித்து வந்துள்ள புகார்களைப் பரிசீலித்த ஃபேஸ்புக் நிர்வாகம் மேற்படி லைவ் வீடியோக்கள், கொலை, விபத்து மற்றும் வன்முறை வீடியோக்களை கட்டுப்படுத்தக் எக்ஸ்ட்ரா பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். அதன்படி, 3,000 புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக மேற்கண்ட வீடியோக்களைக் கட்டுப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பயனாளிகளால் பதிவேற்றப்படும் வீடியோக்களில் ஆட்சேபம் வரக் கூடிய கூடிய வகையிலான வீடியோக்களை வலைதளத்திலிருந்து நீக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற வீடியோக்களைக் கட்டுப்படுத்தி நீக்க, மேம்பட்ட தொழில்நுட்பத்தை விரைவில் உருவாக்க இருப்பதாகவும் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதும் நோக்கத்தக்கது.

0
SHARES
ShareTweet

AccountaddictionFacebookholdersincreased

Post navigation

Prev
Next

Related Posts

1000 ஊழியர்கள் காலி: மார்வெல் ‘விஷுவல்’ உலகிற்கு மூடுவிழா நடத்திய டிஸ்னி!
  • Exclusive
  • உலகம்

1000 ஊழியர்கள் காலி: மார்வெல் ‘விஷுவல்’ உலகிற்கு மூடுவிழா நடத்திய டிஸ்னி!

  • admin
  • April 16, 2026
ஏஐ எதிர்ப்புப் போர்: சிஇஓ-க்கள் மீது நேரடித் தாக்குதல்!
  • Exclusive
  • உலகம்

ஏஐ எதிர்ப்புப் போர்: சிஇஓ-க்கள் மீது நேரடித் தாக்குதல்!

  • admin
  • April 15, 2026
மிஷன் ஆர்டெமிஸ்-2 சக்ஸஸ்!தரைஇறங்கிய நிலவு வீரர்கள் – உலகமே சல்யூட்!
  • Exclusive
  • உலகம்
  • ரவி நாக் பகுதி

மிஷன் ஆர்டெமிஸ்-2 சக்ஸஸ்!தரைஇறங்கிய நிலவு வீரர்கள் – உலகமே சல்யூட்!

  • admin
  • April 11, 2026
தற்காலிக போர் நிறுத்தம்: அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் லெபனானில் இஸ்ரேல் ‘மெகா’ தாக்குதல்!
  • Exclusive
  • உலகம்

தற்காலிக போர் நிறுத்தம்: அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் லெபனானில் இஸ்ரேல் ‘மெகா’ தாக்குதல்!

  • admin
  • April 8, 2026
ஈரான்: மேற்கத்திய ஊடகங்களின் ஒற்றைப் பார்வையும் மறைக்கப்படும் உண்மைகளும்!
  • Exclusive
  • உலகம்

ஈரான்: மேற்கத்திய ஊடகங்களின் ஒற்றைப் பார்வையும் மறைக்கப்படும் உண்மைகளும்!

  • admin
  • April 2, 2026
மில்லினியல் சம்மர்: ஜென்-இசட் அலையை முந்தும் மில்லினியல்கள்!
  • Exclusive
  • உலகம்

மில்லினியல் சம்மர்: ஜென்-இசட் அலையை முந்தும் மில்லினியல்கள்!

  • admin
  • April 1, 2026

Follow Me

  • facebook
  • twitter
  • instagram
  • youtube

Aanthaireporter.in

Add AanthaiReporter.Com | Tamil Multimedia News Web to your Homescreen!

Add