வாட்ஸ் அப், டெலிகிராமில் கேர்ள்ஸ் சேல்ஸ்!- ஐ எஸ் அட்டூழியம்

வாட்ஸ் அப், டெலிகிராமில் கேர்ள்ஸ் சேல்ஸ்!- ஐ எஸ் அட்டூழியம்

உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில், பெண்களை விற்பது தெரியவந்துள்ளது. பெண்களின் வயதுக்கு ஏற்ப இவர்கள் விலை வைத்து விற்று வரும் கொடூரம் நடக்கிறதாம்

is july 7

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினத்தை இனத்தவரான யாழிதி, குர்து இன பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் சிறை பிடித்து செல்கின்றனர். இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதோடு, சந்தையில் செக்ஸ் அடிமைகளாக விற்று வருகின்றனர். புதிய பகுதிகளை கைப்பற்றும் போதெல்லாம் அங்குள்ள பெண்கள், சிறுமிகளை கடத்துவதும், அடிமைகளாகவும் ஆக்குவது தெரியவந்துள்ளது.

சுமார் 3,000 பெண்கள், சிறுமிகள் செக்ஸ் அடிமைகளாக தங்களது கட்டுப்பாட்டில் தீவிரவாதிகள் வைத்துள்ளனர். சந்தையில் பொருட்களை விற்பனை செய்வது போன்று பெண்களையும் அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். செக்ஸ் அடிமைகளாக பெண்களை விற்பது குறித்து தீவிரவாதிகள், ஸ்மார்ட் போன்களில் விளம்பரம் செய்து வருகின்றனர். வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆப்சில் பெண்கள் விற்பனை குறித்து அவர்கள் விளம்பரம் செய்கின்றனர். செக்ஸ் அடிமையாக விற்கப்படும் பெண்ணின் புகைப்படம், அவரது பெயர், வயது, அவருக்கான விலை ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்கின்றனர்.

தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மிர்சா டனாய் என்பவர் கூறுகையில், “தீவிரவாதிகளிடம் இருந்து செக்ஸ் அடிமைகள் தப்பிப்பது என்பது மிகுந்த சிரமம் மற்றும் அபாயகரமான விஷயமாக உள்ளது. அவர்கள் ஒவ்வொரு அடிமையின் பெயரையும், அவரது உரிமையாளரின் பெயரையும் பதிவு செய்து வைத்துள்ளனர். எனவே யாராவது தப்பி செல்ல முயன்று சோதனை மையம் அல்லது தீவிரவாதிகளின் பாதுகாப்பு படையினரிடம் சிக்கினால் அந்த பெண் யார், எந்த உரிமையாளரிடம் இருந்து அவள் தப்பி வந்துள்ளாள் என்பது கண்டுபிடித்து விடப்படுகிறது. இதனால் அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இதனால் தப்பிக்க முடியாமல் கடும் அவஸ்தையை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்” என்றார்.