75-வது குடியரசு தினக் கோலாகலம்: முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி!

75-வது குடியரசு தினக் கோலாகலம்: முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி!

ந்தியாவின் 75வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார். தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

இதையடுத்து வீரதீரச் செயலுக்காக யாசர் அராபத், செல்வன் தே.டேனியல் செல்வசிங், சு.சிவக்குமார் ஆகியோருக்கு அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தனது மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. காயல்பட்டினம்

வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த மீனவர் யாசர் அராபத், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், நெல்லை மாவட்டம் டேனியல் செல்வசிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வெளியான போலி செய்திகளைக் கண்டறிந்து, உண்மை செய்திகளை வெளியிட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜூபேருக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது. அதிக உற்பத்தி திறன் பெறும் வேளாண்மைக்கான உழவர் நலத்துறையின் சிறப்பு விருது பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது மதுரை மாநகரம், நாமக்கல் மாவட்டம் இரண்டாம் பரிசு, பாளையங்கோட்டை காவல்நிலையம் மூன்றாம் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.காந்தியடிகள் காவல் பதக்கங்கள் விழுப்புரம் எஸ்.பி சசாங்சாய், தெற்கு சென்னை மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமி, மதுரை மண்டல காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட தலைமை காவலர் ரங்கநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கி விளையாட்டு, வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

error: Content is protected !!