கொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்!

கொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்!

நாடெங்கும் கண்ணுக்குத் தெரியாமல் பரவும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்ப கட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும்வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மறுக்கும் நோயாளிகளை பாதியிலேயே திருப்பி அனுப்பும் கொடுமையும் நடக்கிறது. பணம் இல்லை என்பதற்காக சிகிச்சை அளிக்க மறுப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது தனியார் மருத்துவ மனைகளின் கடமையாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மற்ற மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

எனவே, கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனை நேற்று விசாரித்த ஐகோர்ட், கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளதாக கூறிய வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை அடுத்து ஜி.ராஜேஷ் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மனுவில் புகார் தெரிவித்திருந்தார். வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் தொடர்ந்த பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 நிர்ணயம் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9,600 வசூலிக்கவும் பரிந்துரைத்து உள்ளது. இருப்பினும் ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!