துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி சர்டிபிகேட்!

துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி சர்டிபிகேட்!

துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

பின்னர் ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது:

சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்றும், துக்ளக் வைத்து இருந்தால் அவர் அறிவாளி என்றும் சொல்லிவிடலாம். இப்போதெல்லாம் செய்தி என்ற பாலில் பொய் என்ற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். பொய்யை உண்மையாக்காதீர் கள். அதாவது  செய்தி என்பது பால் மாதிரி. பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுவார்கள். அதில் பாலில் எது தண்ணீர் எது பால் என்று பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் பிரித்துச் சொல்லணும். அதாவது பால பாலா பிரிச்சுடணும், தண்ணீரை தண்ணீராக பிரிச்சுடணும். மக்களுக்கு உண்மை எது என்று சொல்லணும். ஒரு கிராமத்தில் ஒருவர், தண்ணீர் கலக்காமல் நேர்மையாக ஒரு லிட்டர் பாலை பத்து ரூபாய்க்கு விற்றார். நல்லவராக இருந்தால்தான் வாழ விட மாட்டார்களே. இன்னொருவன் கிளம்பினான் அவன் சிறிது தண்ணீர் கலந்து விலை குறைவாக 8 ரூபாய்க்கு பாலை விற்றான். இன்னொருத்தன் 6 ரூபாய்க்கு அதிக தண்ணீரை கலந்து பால் விற்றான், நல்ல லாபம் கிடைத்தது. மக்கள் அவர்களை நோக்கி சென்றார்கள். ஆனால் பத்து ரூபாய்க்கு பால் விற்றவர் வியாபாரம் சரியாக இல்லை, ஆனாலும் அவர் வியாபாரத்தை தொடர்ந்துச் செய்து வந்தார். அவருக்கு என்று சில வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அந்த ஊரில் திருவிழா வந்தது.

அனைவரும் 6 ரூபாய், 8 ரூபாய் பால் கடைகளை நோக்கி படையெடுத்தார்கள். பால் முழுவதும் விற்றுத்தீர்ந்தது. பின்னர் அனைவரும் பத்து ரூபாய் பால் விற்பவரை நோக்கிச் சென்றார்கள். அவரது பாலை வாங்கி பட்சணம் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை தயாரித்தார்கள். அவை அவ்வளவு ருசியாக இருந்தது. இந்தப்பாலில் மட்டும் என்ன இவ்வளவு சிறப்பு என்று அவரிடம் சென்று வாங்க ஆரம்பித்தார்கள். அவர் பாலில் தண்ணீர் கலக்காமல் விற்றார் மக்கள் அவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற பால்காரர்கள் ஒன்றுமில்லாமல் போனார்கள். அதைத்தான் சொல்கிறேன் பத்திரிகைகள் நீங்கள் தயவு செய்து பொய்யை உண்மையாக்காதீர்கள். சில ஊடகங் கள், சில டிவி சானல்கள் அவர்கள் சார்ந்திருக்கிற கட்சிக்காக என்ன தப்பு செய்தாலும் எழுதத்தான் செய்வார்கள். ஆனால் நடுநிலையில் இருக்கும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், சானல்கள் மனசாட்சிப்படி மக்களுக்கு எது நல்லது, எது நியாயம், எது மக்களுக்கு தேவைன்னு வந்து அவர்கள் வெளியில் வந்து சொல்லணும்

இதை எல்லாம் தெரிஞ்சிதுதான் சோ ராமசாமி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்.  தற் போது சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை.  சோ என்றால் துக்ளக். துக்ளக் என்றால் சோ. துக்ளக் பத்திரிக்கையை குருமூர்த்தி அதே ஒரிஜினாலிட்டியுடன் நடத்தி வருகிறார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்பாக வெங்கய்ய நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்; என்றாலும் இதுவும் ஒரு தந்தைக்குரிய பதவியே

சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி

தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; இந்தநிலையில் சோ போன்ற பத்திரிகையாளர் ஒருவர் அவசியம் தேவை

கவலைகள் நம் வாழவில் அன்றாடம் வரும்; அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது.பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!