ஆரம்பிக்கப் போகுதய்யா.. அசெம்பளி செசனும் ஆரம்பிக்கப் போகுது! – லிஸ்ட் இணைப்பு!

ஆரம்பிக்கப் போகுதய்யா.. அசெம்பளி செசனும் ஆரம்பிக்கப் போகுது! – லிஸ்ட் இணைப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் ஜூன் 28 தொடங்கி ஜூலை 30 வரையில், மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

அவர் கூறுகையில், ”வரும் ஜூன் 28 அன்று சட்டசபை கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். பின்னர் அஜண்டா வழங்கப்படும். ஜூலை 1ம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது அஜண்டா வழங்கிய பிறகே தெரியும்.

அதன்படி,

ஜூலை 1-ம் தேதி : வனத்துறை, சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள்.
ஜூலை 2-ம் தேதி : பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலம், மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, உயர்க்கல்வி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
ஜூலை 3-ம் தேதி : கூட்டுறவு, உணவு,
ஜூலை 4-ம் தேதி : எரிசக்தித்துறை, மதுவிலக்கு.
ஜூலை 5-ம் தேதி : மீன்வளம், பணியாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம்.
ஜூலை 6, 7-ம் தேதி அரசினர் விடுமுறை.
ஜூலை 8-ம் தேதி : நகராட்சி, ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்டம் செயலாக்குத்துறை.
ஜூலை 9-ம் தேதி : நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை.
ஜூலை 10-ம் தேதி : சமூகநலம், மாற்றுத்திறனானிகள் நலம், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை.
ஜூலை 11-ம் தேதி : தொழில்த்துறை, சிறு,குறு, மற்றும் நடுத்தெரு தொழில்கள்.
ஜூலை 12-ம் தேதி : கைத்தெறி மற்றும் துணி நூல், செய்தி,விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை.
ஜூலை 13, 14 -ம் தேதி அரசினர் விடுமுறை.
ஜூலை 15-ம் தேதி : நெடுஞ்சாலைகள், கட்டிடங்கள், பாசனம், பொதுப்பணித்துறை.
ஜூலை 16-ம் தேதி : மக்கள் நல்வாழ்வுத்துறை
ஜூலை 17-ம் தேதி : வேளாண்மைத்துறை
ஜூலை 18-ம் தேதி : சுற்றுலா,கலைபண்பாடு, இந்துசமய அறநிலைத்துறை
ஜூலை 19-ம் தேதி : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
ஜூலை 20,21 -ம் தேதி அரசினர் விடுமுறை
ஜூலை 22-ம் தேதி : காவல்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
ஜூலை 23-ம் தேதி : பதிலுரை, வணிகவரிகள், முத்திரைத்தாள்,பத்திரப்பதிவுத்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை.
ஜூலை 24-ம் தேதி : தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை.
ஜூலை 25-ம் தேதி :நிர்வாகம், போக்குவரத்துத்துறை.
ஜூலை 26-ம் தேதி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கதர் கிராம தொழில்கள் ஆகிய துறைகள்.
ஜூலை 27,28 -ம் தேதி அரசினர் விடுமுறை.
ஜூலை 29-ம் தேதி : பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுனர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, திட்டம் மற்றும் சிறப்பு முயற்ச்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வூதிய காலநன்மைகள்.
ஜூலை 30 -ம் தேதி காலை மேற்கொண்ட துறைகளுடைய பதிலுரையுடன் நிறைவேற்றப்படும். மொத்தம் 23 நாட்கள் சட்டமன்றம் நடைபெறுகிறது.

சட்டமன்றம் நடக்கும் எல்லா நாட்களிலும் கேள்வி நேரம் இருக்கும்”என்று இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!