பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்க, தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக்கை வர்மா என்ற பெயரில் படப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி மாதம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலை யில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான இ4 என்டர்டெயின்மென்ட் இன்று மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டு, வர்மா படம் வெளிவராது, மீண்டும் வேறு இயக்குநருடன் படப்பிடிப்பு நடக்கும் என கூறியுள்ளது.

அந்த அறிக்கையில், “அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா எனத் தலைப்பிட்டு பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் முதல் ப்பி அடிப்படையில் தயாரிக்க முடிவு செய்தோம். எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறுதி காப்பியைப் பார்த்து எங்களுக்குத் திருப்தியில்லை. அதில் பல படைப்பு வித்தியாசங்களும், மற்ற வித்தியாசங்களும் இருந்தன. அதனால், அந்த பிரதியை வெளியிட வேண்டாம் என முடிவு செய்தோம்.

அதற்குப் பதிலாக புதிதாக மீண்டும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரிஜனல் படத்தின் ஆன்மா சிறிதும் குறையாத விதத்தில் அதற்கு உண்மையாக துருவ் நாயகனாக நடிக்க படமாக்க உள்ளோம். இயக்குநர் உள்பட மற்ற நட்சத்திரங்கள், கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்த எதிர்பாராத திருப்பமும், நிகழ்வுகளும் எங்களுக்கு மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் சினிமா மீது எங்களுக்குள்ள அன்பால் அந்த அற்புதமான படத்தின் தரம் தமிழில் எந்த விதத்திலும் குறையக் கூடாது என நினைக்கிறோம். புதிய குழுவுடன் ஓய்வில்லாமல் உழைத்து படத்தை ஜுன் 2019 வெளியிட உள்ளோம்,” என தெரிவித்துள்ளனர்.

தமிழ் ..அட.. இந்திய திரைப்பட வரலாற்றில், ஒரு படம் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டு, கருத்து வேறுபாடு மற்றும் திருப்தியில்லை என்பதால் படம் திரைக்கு வராது, வேறு இயக்குநருடன் இதே கதையை மீண்டும் எடுக்கப்போகிறோம் என்ற அறிவிப்பு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!