டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம்? – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம்? – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மறுத்து விட்ட சுப்ரீம் கோர்ட், அதுகுறித்து 4 வார காலத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலைச் சின்னம் வழக்கில் தீர்ப்பு வெளி யாகும் வரை, இனி வரும் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று (பிப்ரவரி 7) வழங்கியது. அதில், டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது. சின்னம் வழங்குவது தொடர்பாக மேற்படி டெல்லி ஐகோர்ட்டிலுள்ள இரட்டை இலை சின்ன வழக்கை 4 வார காலத் திற்குள் முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அதன் பிறகு, அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையமே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சென்னை – ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை தேர்வு செய்தார். இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதனால் இனி வரும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தினகரன் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு குறித்து கள்ளக்குறிச்சியில் டிடிவி. தினகரன் செய்தியாளர் களிடம், “குக்கர் சின்னம் தரமுடியாது என  சுப்ரீம் கோர்ட் கூறவில்லை. திருவாரூர் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில்  வலியுறுத்தினோம். இப்போது குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில்   சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை. குக்கர் சின்னம் எப்படியும் எங்களுக்கு கிடைக்கும். தேர்தல் சின்னத்தை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க வில்லை. மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்கிறார்கள்” இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.

Related Posts

error: Content is protected !!