அப்பா சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி என நடிகர் பிரபு கூறியுள்ளார். #SivajiGanesan #Prabhu
சென்னை,
 
அக்டோபர் 1-ந்தேதி நடிகர் சிவாஜி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.  தென்னிந்திய நடிகர் சங்க மற்றும் அவரது குடும்பம்  ஆகியவை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததின்  பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்று சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
 
இந்தநிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சிவாஜின் மகனும், நடிகருமான பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
நடிகர் சிவாஜி கணேசனை தங்கள் குடும்பத்தில் ஒருவராக லட்சக்கணக்கானோர் கருதுகின்றனர். நடிகர் சிவாஜி கணேசன் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. கோரிக்கை விடுத்த திமுக, காங்., பாஜக உள்ளிட்ட கட்சியினருக்கும் நன்றி.
 
இவ்வாறு பிரபு கூறியுள்ளார்.
error: Content is protected !!