கோட்டையில் துப்பரவுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு எம்.டெக் படித்தோரும் போட்டி!

கோட்டையில்  துப்பரவுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு எம்.டெக் படித்தோரும் போட்டி!

தமிழ்நாடு அசெம்பளியில் ஸ்வீப்பர் எனப்படும் துப்புரவாளர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிடம் நடைபெற்றுவரும் நேர்காணலில் எம்.டெக். உள்ளிட்ட பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் பங்கேற்று வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவுப் பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பை கல்வித் தகுதியாக நிர்ணயித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 18 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு கல்வி தகுதி குறிப்பிடப்படாமல், உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இட ஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில், சம்பள விகிதம் 15 ஆயிரத்து 700 ரூபாய் என்றும், அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.ஈ படித்தவர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 677 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 930 பேருடைய விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி என்றாலும் எம்.இ., எம்.டெக், எம்.பி.ஏ., பி.இ., பி.டெக்., பி.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியான 4 ஆயிரம் பேரின் பெயர் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கடந்த 23 ஆம் தேதி முதல் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்காணலும் நடைபெற்று வருகிறது.

ஒரு நாளுக்கு 100 பேர் வீதம் 40 நாட்களுக்கு நடைபெறும் நேர்காணலில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பெரும்பாலோனார் இடம் பெற்றுள்ளனர். சட்டபேரவை சபாநாயகர் மற்றும் செயலாளர் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதால் சட்டபேரவை அதிகாரிகள் நேர்காணல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்மையால் தான் பிஇ பிடெக் எம்டெக் படித்தவர்கள் துப்பரவு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று விமர்சனங்கள் பரவி வருகின்றன்

Related Posts

error: Content is protected !!