கிறிஸ்துமஸ் கோலாகலம் … கேரளாவில் 154 கோடிக்கு மது விற்பனை!

கிறிஸ்துமஸ் கோலாகலம் … கேரளாவில் 154 கோடிக்கு மது விற்பனை!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்று பல்வேறு விஷயங்கள் அடங்கும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய இரு தினங்கள் விடுமுறை நாட்களாக இந்த ஆண்டு அமைந்தது. அதனால் பல்வேறு நகரங்களிலும் பணி புரிந்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.அவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய 3 தினங்களில் துபான சில்லறை கடைகள் மூலம் 154.78 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 24ம் தேதி மட்டும் ரூ.70.74 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கேரள மதுபான கழகம் (பெவ்கோ) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.144.91 கோடிக்கு மது விற்பனையாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு அதைவிட சுமார் 10 கோடி அளவுக்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!