மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள்!

மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள்!

மொபைல் போன் என்பது இன்றைய வாழ்க்கையில் முக்கியமானதாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் 2ஜி, 3ஜி தொழில்நுட்ப இணையதள வசதிகளுடன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை மினி கம்ப்யூட்டர் போலவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.விலை உயர்ந்த செல்போன்களை உபயோகிப்பவர்கள் அந்த போன் தொலைந்து விட்டாலோ, திருட்டு போனாலோ அதில் உள்ள ரகசிய பைல்கள், விபரங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடிக்கும் வகையில் பல்வேறு சாப்ட்வேர்கள் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இதனிடையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் Silent Sense என்னும் இந்த மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.
tec oct 18
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் சென்போ மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள். இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.

100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது. பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.

error: Content is protected !!