பிரதமர் மோடி மான் கீ பாத் ரேடியோ நிகழ்சியில் பேசியது இதுதான்!

பிரதமர் மோடி மான் கீ பாத் ரேடியோ நிகழ்சியில் பேசியது இதுதான்!

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 69வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றிய சேதி இதோ.

ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டம் குறித்த விஷயங்களை, குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவில் கதை சொல்லும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உதாரணமாக இணைய வழியில் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள சிலரது பெயர்களை சுட்டிக்காட்டினார்.

அதில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா வீரராகவன், கீதா ராமானுஜன் ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றனர் என்று குறிப்பிட்டார். Kathalaya மற்றும் The Indian Story Telling Network தளங்கள் மூலம் அவர்கள் கதைகளை பிரபலப்படுத்துவதாக கூறியுள்ளார். நாட்டில் பலவகையான நாட்டுப்புறக் கலைகள் இருக்கின்றன. தமிழகம் மற்றும் கேரளாவில் கதை சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது. இதனை வில்லுப்பாட்டு என அழைக்கிறோம்.

இதில் கதைகளும், இசையும் என்ற மிக கவர்ச்சிகரமான இணைவு காணப்படுகிறது’ என்றார். நமது நாட்டின் புதிய தலைமுறையினருக்கு நமது மகத்தான மனிதர்கள், மகத்தான தாய்மார் கள்- சகோதரிகளைப் பற்றி கதைகள் மூலம் தெரிவித்து, அவர்களோடு இணைந்து இந்தக் கதை சொல்லுதல் கலையை எவ்வாறு பிரபலபடுத்துவது என்பதை அறிய வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். நாம் அடிமைப் பட்டுக் கிடந்த இருண்ட காலகட்டம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் சம்பவங்களை உங்கள் கதைகள் வாயிலாக பிரசாரம் செய்ய முடியுமா? குறிப்பாக 1857 முதல் 1947 வரையிலான அனைத்து சிறிய பெரிய சம்பவங்களை நமது புதிய தலைமுறையினருக்கு கதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தலாம். நாட்டின் வேளாண்துறை நமது விவசாயிகள், நமது கிராமங்கள் ஆகியன சுயசார்பு இந்தியாவின் ஆதாரங்கள். இவை வலுவாக இருந்தால் தான் சுயசார்பு இந்தியாவின் அஸ்திவாரம் பலமாக இருக்கும்.

பகத் சிங்கின் பிறந்த நாள் நாளை கொண்டாட உள்ளோம். மக்களுடன் இணைந்து நானும் பகத் சிங்கிற்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தைரியம் மற்றும் தியாகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். பகத் சிங்கின் தேசப்பற்றை முன்னுதாரணமாக வைத்து நாட்டிற்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீபத்தை நம் மனதில் ஏற்றி, அதன் வழியில் பயணிப்போம். அக்., 2 ஆனது நமக்கு தூய எண்ணங்களை தரும் நாட்களாக உள்ளது. அன்னை இந்தியாவின் சிறந்த இரண்டு மகன்களான மஹாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியை நினைவில் கொள்வோம். மஹாத்மா காந்தியின் எண்ணங்களும் கருத்துகளும் இன்றும் பொருந்துவதாக உள்ளது.

மஹாத்மா காந்தியின் பொருளாதார கருத்துகளின் உணர்வினை நாம் புரிந்து கொண்டு அந்த பாதையில் பயணித்திருந்தால், இன்று சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கான தேவை ஏற்பட்டு இருக்காது. மஹாத்மாவின் பொருளாதார சிந்தனையில் பாரதத்தின் நாடி நரம்புகளை பற்றிய புரிதல் இருந்தது. அதில் இந்தியாவின் மனம் கமழ்ந்தது. நமது அனைத்து செயல்களும் பரம ஏழைகளுக்கும் நலன் ஏற்படுத்துவனவாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை தான் மஹாத்மாவின் வாழ்க்கை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது.என்று தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!