டென்மார்க்கில் ஒரு கவலை!

டென்மார்க்கில் ஒரு கவலை!

டென்மார்க் நாட்டில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துவருகிறது. இதுபற்றி நாட்டை விட கொஞ்சி விளையாட பேரக் குழந்தைகள் இல்லையே டேனிஸ் பாட்டிமார்கள் கவலைப்படத் தொடங்கி விட்டனர். அதற்காக ஒரு டிராவல் கம்பெனி புதுமையான ஒரு ஐடியாவை கொண்டு வந்திருக்கிறது.
12074503_1283680024991380_8632322367765261012_n
ஸ்பைஸ் ரெய்சர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. பாலியல் உணர்வு களைத் தூண்டக்கூடிய விடுமுறையைக் கழிப்பதற்காக, குழந்தைப் பிறப்பில் விருப்பமில்லாத, அதை தள்ளிப்போடும் திருமணமான தம் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாம் பேரக் குழந்தைக்காகத்தான்.

“You can’t buy love. Or can you?” இந்த வாசகத்துடன் புதிய டிராவல் பேக்கேஜ் பற்றிய வீடியோ தொடங்குகிறது. தாத்தாக்களுக்கு பேரக் குழந்தைகள் இல்லையே என்ற கவலை இல்லையாம். பாட்டிகள்தான் கைப்பிடித்துச் செல்ல, கொஞ்சி விளையாட, சொல்லிக்கொடுக்க, குடும்பக் கதையைச் சொல்ல பேரக் குழந்தைகள் இல்லையே என கவலையில் உறைந்திருக்கிறார்களாம்.

இந்த விடுமுறையை “Do It for Denmark” என்று அழைக்கிறார்கள். டேனிஸ் பள்ளிகளில்கூட குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடாதீர்கள் என்று கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். கடைசியில் அந்த வீடியோ இளைய தலைமுறையிடம் இப்படித்தான் வேண்டுகோள் வைக்கிறது.

“ஒருவேளை அதை அவர்கள் தங்கள் நாட்டுக்காகக்கூட செய்யாமல் போகலாம். தங்களுடைய அம்மாக்களுக்காக நிச்சயம் செய்வார்கள்”

சுந்தரபுத்தன்

Related Posts

error: Content is protected !!