சிலிண்டருக்கு ரூ10 -ம டீசல் விலையை மாதந்தோறும் ரூ1 அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு!

சிலிண்டருக்கு ரூ10 -ம டீசல் விலையை மாதந்தோறும் ரூ1 அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு!

தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை 11 ரூபாயும், சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 555 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதை அடுத்து மாதந்தோறும் 50 பைசாவாக உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலையை 1 ரூபாயாக உயர்த்தவும், இதே போல் சமையல் கேஸ் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்படடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
nov 7 - gas and disel
சமீப காலமாக பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக டீசல் விலை மாதந்தோறும் 50 காசுகள் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாத நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.4 இழப்பு இருந்தது. அதன்பின், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த இழப்பு ரூ.11 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த பரேக் கமிட்டி பரிந்துரை செய்தது. தற்போது டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் டீசல் விலையை கடுமையாக உயர்த்தினால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். எனவே பரேக் கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக ஏற்கவில்லை.

எனினும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாதந்தோறும் ரூ.1 அளவுக்கு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.1 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை 50 காசுகள் என்ற முறையில் டீசல் விலை உயர்த்தப்படலாம். இதே போல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கேஸ் சிலிண்டருக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். இதனால் இந்த ஆண்டு சமையல் கேஸ் விற்பனையில் ஏற்படும் இழப்பு ஓரளவு குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் கனவில் மண்ணை வாரி போட்டன. இதன் காரணமாக கேஸ் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தள்ளப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தகவல்கள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து பெட்ரோலிய துறை அதிகாரிகள் கூறுகையில, “டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தும் எண்ணம் இல்லை. படிப்படியாக உயர்த்தப்படும். அதன்படிதான் மாதந்தோறும் சிறிய அளவில் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.500க்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, டீசலை போலவே மாதந்தோறும் சிலிண்டருக்கும் விலை உயர்த்தலாம் என்று அமைச்சகம் பரிசீலித்து வருகிறது” என்றனர்.

Diesel price rise may double to Rs. 1 per month

*********************************************************
Get ready for more price battles. The monthly hikes in diesel prices may double to Rs. 1 a litre from the current 50 paise. Along with this may come a monthly hike in the price of cooking gas (LPG), in the range of Rs. 5 to Rs. 10 per cylinder.

Related Posts

error: Content is protected !!