சிம்பு + நயன் + ஆன்ட்ரியாவின் இது நம்ம ஆளு! ஆல்பம் பிளஸ் டிரெய்லர்
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும் . இந்தப் படத்தை டி.ஆரின் சிம்பு சினி ஆர்ட்ஸுக்காக பாண்டிராஜ் முதல் காப்பி அடிப்படையில் தயாரித்தார். சிம்பு, நயன்தாரா சம்பளம் தவிர்த்து எட்டு கோடி என முதலில் பட்ஜெட் போடப்பட்டது. இப்போது படத்தின் விற்பனை எவ்வளவு தெரியுமா?
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை 28.9 கோடிகளுக்கு வாங்கி யுள்ளது. படத்தின் வெளிநாட்டு உரிமை 12 கோடிகளுக்கு வாங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒளி பரப்பு உரிமை 15.8 கோடிகள். இசை உரிமை 1.10 கோடி. கிட்டத்தட்ட அறுபது கோடிகளை வெளி யாகும் முன்பே படம் வசூலித்திருப்பதாக கணக்கு சொல் கிறார்கள். ஆக படம் பல மாதங்களாக இழுத்தடித்ததால் படத்தின் மவுசு கொஞ்சம் மங்கியது. அதனை துடைத்து எறிந்திருக்கிறது, சிம்புவின் பீப் பாடல் விவகாரம். என்று தான் சொல்ல வேண்டும் ஆனாலும் இன்னும் கடன், கோர்ட் பிரச்னையை தாண்டி எப்போ ரிலீஸாகும் என்றுதான் தெரியவில்லை