குடும்ப வேர்களைத் தேடும் ‘சைவம்’ ஆல்பம்

குடும்ப வேர்களைத் தேடும் ‘சைவம்’ ஆல்பம்

தல நடித்த கீரிடம் தொடங்கி இளைய தளபதி விஜய் நடித்த தலைவா படத்தையெல்லாம் இயக்கிய விஜய் இப்போது திங் பிக் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு கம்பெனியை சொந்தமாகத் தொடங்கி தேனே டைரக்ட் செய்து வரும் படம் சைவம். நீரவ்ஷா ஒளிப்பதிவு , ஜி.வி.பிரகாஷ்குமர் மியூசிக் உள்பட தலைவா டெக்னிகல் டீம் அப்படியே இந்தப் படத்திலும் வேலை செய்கிறது. சத்தமே இல்லாமல் காரைக்குடியில் ஒரு மாதமாக ஷூட்டிங் நடத்தி வந்தார்.படம் பற்றி கேட்ட போது,”இது முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும் . நமது குடும்ப வேர்களை பற்றிய கதை இது ….நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் கதை ….. நாசர் சார் தன்னுடைய வாழ் நாள் சாதனையாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம் . அந்த குட்டி தேவதை சாரா , தெய்வ திருமகள் படத்தில் இருந்ததை விட பல மடங்கு உயரத்தை நடிப்பால் இந்த படத்தில் தொட்டு இருக்கிறார் . லுதுப் என்கிற பாஷா என்கிற பெயரில் அறிமுகமாகும் நாசர்- கமீலா நாசர் தம்பதியரின் மகன் இந்த படத்தில் ரகளை படுத்தி இருக்கிறார் . அவருடைய உற்சாகம் திரையிலும் தெறிக்கும் என்று நம்புகிறேன் . இசை அமைப்பாளர் ஜி. வீ . பிரகாஷ் மற்றும் ஒளிபதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் என்னுள் இணைந்த , என்னுடைய மன ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன் . ஒரு படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆற்றும் போதே அடுத்த படத்தை பற்றி நாங்கள் விவாதிக்க தொடங்குவோம்.அதுவே நாங்கள் தொடர்ந்து பணியாற்றும் ரகசியம் . ‘ சைவம் ‘ இந்த கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும் .இந்த தலைப்பு எந்த ஒரு கலாச்சாரத்தை பற்றியதோ , வழக்கத்தை பற்றியதோ அல்ல …. கதையின் மைய கருத்தை பற்றியது ‘ என்று கூறுகிறார் இயக்குனர் விஜய்!

.

Related Posts

error: Content is protected !!