காஷ்மீரில் மீண்டும் தேர்தல்!

காஷ்மீரில் மீண்டும் தேர்தல்!

காஷ்னீரில் நடந்து முடிந்த தேர்தலையடுத்து யாரும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக அமல்படுத்தப்பட்டதுஅமல் படுத்தப்பட்டது. மேலும் ஆட்சி அமைக்க கட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருப்பது இதனால் காஷ்மீரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
j and kas
87 தொகுதிகள் கொண்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கு அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகளும் கிடைத்தன. தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களைக் கைப்பற்றினர்.

ஆட்சியமைக்க தேவையான 44 உறுப்பினர்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. இதனால் மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவானது.இதனால் எதிரும், புதிருமான கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க முயற்சியில் ஈடுபட்டன. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன.

ஆனால், இது தொடர்பான பேச்சுவார்த்தை கடைசி வரை முன்னேற்றம் அடையவில்லை. இதேபோல் பா.ஜனதவும், மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டாக ஆட்சி அமைக்க திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடத்தியதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இழுபறியே நீடித்து வந்தது.இந்த நிலையில், இடைக்கால முதல்-மந்திரியாக பொறுப்பு வகித்து வந்த உமர் அப்துல்லா தன்னால் தொடர்ந்து ஆட்சியை நிர்வகிக்க இயலாது. எனவே தன்னை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு நேற்று முன்தினம் மாநில கவர்னர் என்.என். வோராவை கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான உறுப்பினர்களை எந்தக் கட்சியாலும் திரட்ட முடியாது என்ற நிலை நீடித்து வந்ததால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் என்.என்.வோரா, ஜனாதிபதிக்கு பரிந்துரை அறிக்கை அனுப்பி வைத்தார்.இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி நேற்று உத்தரவிட்டார். அதன்படி காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

error: Content is protected !!