கணவர்களின் ‘கள்ள மெயில்கள்!’

கணவர்களின் ‘கள்ள மெயில்கள்!’

5 கணவர்களில் ஒருவர் தங்களது மனைவிக்குத் தெரியாமல் ரகசிய ஈமெயில் கணக்குகளை வைத்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ரகசிய ஈமெயில் கணக்குகளில் திருமணத்தைத் தாண்டிய தங்களது அந்தரங்க வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் விவாகரத்து செய்த தங்களது பழைய மனைவிகள் பற்றிய குறிப்புகளை மறைத்து வைத்திருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் நடந்த இந்த ஆய்வின் படி மில்லியனுக்கும் அதிகமான கணவன்மார் விவாகரத்துப் பெற்ற தங்களது பழைய மனைவிகளோடு தொடர்புகொள்வதற்காக தங்கள் பழைய ஈமெயில் கணக்குகளை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Laptop man owl 19
மற்ற கணவர்கள் தங்களின் பொருளாதார நிலவரங்களை மறைத்து வைக்கவும் மற்றும் திருமணத்தைத் தாண்டிய தங்களின் அந்தரங்க வாழ்க்கை நிகழ்வுகளையும் கணக்குகளில் மறைத்து வைக்கவும் இந்த ரகசிய ஈமெயில் கணக்குகளை வைத்திருப்பதாக டெய்லி மெயில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

20 ஆண்டுகளில் ஒருவர் தங்கள் ரகசியங்களை மிகவும் தனிப்பட்ட முறையில் பாதுகாக்க இரண்டாவது மொபைல் போன்களை வைத்திருக்கின்றனர் என்றும், அதுபோல் தங்களது மனைவிகள் அல்லது பெண் தோழிகள் தமக்கு வரும் எஸ். எம். எஸ். களைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக 77 சதவீத ஆண்கள் தங்களுக்கு வரும எஸ். எம். எஸ். களை உடனே அழித்துவிடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதுபோல் 20 சதவீத ஆண்கள் தங்களது வாழ்க்கைத் துணை தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றனர். அதற்காகவே இந்த ரகசிய ஈமெயில் கணக்குகளை அவர்கள் வைத்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நான்கில் ஒரு பகுதி ஆண்கள் தங்களுக்குத் தெரியாமல் தங்களது கூகுள் ஹிஸ்டரியை யாராவது பார்த்துவிட்டால் அவர்களது முகம் சிவந்துவிடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆய்வு தங்களது மனைவிகள் மற்றும் பெண் தோழிகளுக்கு தெரியாமல் இங்கிலாந்து கணவர்கள் மற்றும் ஆண்கள் ஆண்லைனில் வைத்திருக்கும் ரகசியங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Related Posts

error: Content is protected !!