ஏசி சோபா! – குஜராத் மெக்கானிக்கின் நவீன கண்டுப் பிடிப்பு

ஏசி சோபா! – குஜராத் மெக்கானிக்கின் நவீன கண்டுப் பிடிப்பு

பெரும்பாலான கண்டுபிடிப்புகள், மிகவும் சாதாரண பின்னணி அல்லது மிகக் குறைந்த கல்வி தகுதி கொண்டவர் களால் உருவாக்கப்படுவது காலம் காலமாக தொடர்ந்து நடந்து வரும் ஒன்றுதான். அந்த வகையில் மற்றொரு கண்டுப்பிடிப்பாக குஜராத்தைச் சேர்ந்த தஸ்ரத் படேல் என்ற ஏ.சி. மெக்கானிக், தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் ஏ.சி. சோபா ஒன்றை வடிவமைத்துள்ளார்.
ac sofa
குஜராத் காந்தி நகரை சேர்ந்த தாஸ்ராத் படேல் என்ற இந்த ஏ.சி. மெக்கானிக், இது குறித்து கூறும்போது, ”எனக்கு இது மாதிரியான ஏ.சி.சோபாவை உருவாக்கும் எண்ணம் போன 2008ம் ஆண்டே ஏற்பட்டது., அதையடுத்து அதற்கான வேலைகளை செஞ்சிக் கிட்டே இருந்தேன். இதன் முதற்படியாக நான் வடிவமைத்த சோபா 175 கிலோ எடை இருந்தது. . இதன் எடை மிகவும் அதிகமானதால், குறைந்த எடையில் சோபா உருவாக்க வேண்டிய முயற்சியில் ஈடுபட்டேன்.

அப்பதான் ஃப்ரண்ட்ஸ் சிபாரிசில் தேசிய வடிவமைப்பு நிறுவனதை நாடினேன். அவங்க தங்கள் பழைய ஸ்டூடண்ட் அங்கித் வியாஸ் என்ற வடிவமைப்பாளரை எனக்கு உதவியா அனுப்பினாங்க.. அவர் சப்போர்ட்டுலே இப்ப வெரும்35 கிலோ எடைக்கொண்ட ஏ.சி.சோபாவை உருவாக்கியாச்சு. இப்போதைக்கு இதன் விலை ஒரு லட்சம் முதல் 1.25 லட்சம் ரூபாயாக இருக்கும்” என படேல் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!