உலக அழகி போட்டிகள்: பாலி தீவிற்கு மாற்றம்!

உலக அழகி போட்டிகள்:  பாலி தீவிற்கு மாற்றம்!

இந்தோனோஷியாவின் ‌தலைநகர் ஜகார்தாவில் இம்மாதம் 28ம் தேதி நடக்கவிருந்த உலக அழகிப்போட்டிகள் பாலி தீவிற்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள், அந்நாட்டு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் தெரிவித்தனர். போட்டிகள் நடத்த சில மத அமைப்பினரிடமருந்து வந்த கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
sep 9 - miss world ban
உலக அழகி போட்டி இந்தோனேசியாவில் இன்று தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் அழகிப் போட்டி நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போட்டி நடத்துபவர்களின் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதை தொடர்ந்து, ஜகர்த்தாவில் உலக அழகிப் போட்டி நடைபெறாது என அரசு அறிவித்துள்ளது. போட்டியின் தொடக்க விழா இந்துக்கள் அதிகமாக வாழும் பாலதீவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இங்கு பிகினி உடைக்கு அனுமதி கிடையாது என்பதால், அழகி போட்டியில் இருந்தும் பிகினி உடையை போட்டி அமைப்பாளர்கள் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து போட்டி அமைப்பாளர்கள் கூறுகையில், இந்தோனேசியாவின் பாரம்பரியம், மரபு, பழக்க வழக்கம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீச்சல் உடைப் போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.என்றனர்

இதற்கிடையில் இந்த அழகி போட்டியின் இறுதி போட்டி ஜகர்த்தாவின் புற நகரில் வருகிற 28–ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Miss World final moved to Bali following Indonesia protests
*****************************************************************************
The announcement is the latest sign in the world’s biggest Muslim-majority nation of fringe Muslim groups’ growing influence on authorities and their power to stymie events they deem un-Islamic.Last year, pop sensation Lady Gaga axed a concert after a series of protests, where radicals dubbed her “the devil”, threatened to burn down the venue and criticised her for wearing only “a bra and panties”.