இஸ்லாமிற்கு மாறியது மட்டுமே உண்மை! – யுவன் சங்கர் ராஜா தகவல்!

இஸ்லாமிற்கு மாறியது மட்டுமே உண்மை! – யுவன் சங்கர் ராஜா தகவல்!

அண்மையில் இஸ்லாம் மதத்தை தழுவிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தந்தை இளையராஜாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு என்று வந்த செய்தியும் இன்னொரு கல்யாணம் செய்திருப்பதாக வெளியான செய்தியும் வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார்.அதே சமயம் யுவனின் மத மாற்றம் பற்றி சில கருத்துக்களும் கோடம்பாக்கத்தில் உலவி வருகின்றன.
Yuva_Twitter
இசைஞானியின் வாரிசு யுவன்சங்கர் ராஜா ஒரு முஸ்லீம் பெண்ணை 3-வது திருமணம் செய்துள்ளதாக ஒரு செய்தி அண்மையில் வெளியானது..அதிலும் கோவையில் நடந்த நடிகர் கிருஷ்ணாவின் திருமணத்தில் தனது புதிய இஸ்லாமிய மனைவியுடன் யுவன் கலந்து கொண்டார் என்று புகைப்படத்துடன் வந்த செய்தியே அன்றைக்கு சகல தளங்களிலும் பரவியது.

இந்நிலையில் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நான் 3வதாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அது போலியான செய்தி. ஆனால் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்கு நான் பெருமை அடைகிறேன். இந்த முடிவிற்கு என் குடும்பத்தினர் ஆதரவு தருகின்றனர். இது தொடர்பாக எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.அல்ஹம்துலில்லாஹ்.”என்று அதில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த மத மாற்றம் சம்பந்தமாக கோடம்பாக்கத்தில் விசாரித்த போது,”யுவன்ஷங்கர் ராஜாவைப் பொறுத்தவரையில் அவரது இரண்டு திருமண வாழ்க்கையுமே அவருக்கு நிம்மதித் தராமல் போயிருக்கிறது. மேலும், அம்மாவின் இழப்பும் அவரை நிறையவே தடுமாற வைத்திருக்கிறது.இந்த சூழ்நிலையில் யுவனுக்கு நெருக்கமான முஸ்லிம் மத்தைச் சார்ந்த ஒரு இயக்குனர் அவருக்கு முஸ்லிம் மகான் எழுதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார்.அந்த புத்தகத்தைப் படித்ததும் யுவனுக்கு ஒரு தெளிவு கிடைத்ததாகவும், அதனால் அவர் முஸ்லிம் மதத்தைத் தழுவ விருப்பப்பட்டதாகவும் தெரிகிறது.அதைத் தொடர்ந்து அந்த இயக்குனரின் ஏற்பாட்டின்படி, பாண்டிச்சேரியில் உள்ள முஸ்லிம் மத குரு ஒருவரிடம் யுவன்ஷங்கர் ராஜா ஆசி பெற்று அந்த மதத்தைத் தழுவினார்” என்று கூறப்படுகிறது .

அதே சமயம் யுவனின் மத மாற்றம் பற்றி சில கருத்துக்களும் கோடம்பாக்கத்தில் உலவி வருகின்றன.தமிழில் பல படங்களுக்கு இசையமைத்தாலும் யுவனுக்கு இன்னும் ஹிந்தித் திரையுலகிலும், சர்வதேச அளவிலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.ஆனால் ஏ.ஆர். ரகுமான் , முஸ்லிம் மதத்தைத் தழுவிய பின்னர்தான் இசையமைப்பாளராகி தற்போது ஆஸ்கர் விருதுகளைப் பெற்று உலக அளவிலும் புகழ் பெற்றவராக இருக்கிறார்.அதனால்தான் யுவனும், மதம் மாறியிருக்கிறார் என்றும் செய்தியை வெளியிட்டு வருகிறார்கள்.

error: Content is protected !!