.இந்த வாரம் ஒன்றை கற்போம் – 30 ! சூப்பர் மூன் எக்ளிப்ஸ்!!

.இந்த வாரம் ஒன்றை கற்போம் – 30 ! சூப்பர் மூன் எக்ளிப்ஸ்!!

1900களில் இருந்து ஐந்து முறையே இந்த சூப்பர்மூன் + லூனார் எக்ளிப்ஸ் நடந்துள் ளது. இன்று இதை நீங்கள் கான மிஸ் செய்து விட்டால் இனிமேல் 2033 ஆம் ஆன்டு தான் நடைபெறும். இதனை எப்படி வெறும் கண்கள் அல்லது நாசாவின் லைவ் ஸ்ட் ரீம் காஸ்டில் காண்பது என்ற டீட்டெயிலை பார்பதற்க்கு முன் இது என்ன எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு குறிப்பேடு…
ravi sep 27
1. சூப்பர் மூன் என்பது புது முழு நிலா நாளை ஈக்குவினாக்ஸ்க்கு கீழே பூமிக்கு மிக அருகில் வரும் மூன் தான் சூப்பர் மூன். இது வழக்கத்தை விட 14% பெரிதாக காணப் படும்.

2. லூனார் எக்ளிப்ஸ் என்பது நிலா பூமிக்கு நேர் பின்புறம் அந்த நிழலுக்கு பின்பு செல்வதால் சிவப்பு கலரில் நிலா ஒளிரும்.

3, சூப்பர் மூன் + லுனார் எக்ளிப்ஸ் இந்த இரண்டும் ஒரு சேர நடைபெறுவது தான் சூப்பர்மூன் எக்ளிப்ஸ் என்பதாகும். .

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்வதென்றால்.. செப்டம்பர் மாத இறுதியில் பவுர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு அருகே தோன்றும். அந்த முழு சந்திரனை ‘அறு படை நிலா’ என அழைப்பார்கள். பண்டைய காலத்தில் இந்த நிலா வெளிச்சத்தை நம்பியே விவசாயிகள் அறுவடையை தொடங்குவார்கள். இது சாதாரண நிலா வை விட 30 சதவீதம் பிரகாசமாக இருக்கும். எனவே இரவு வேளைகளில் அறு வடை செய்வதால் அறுவடை நிலா’ என அழைக்கப்படும் இத்தகயை சந்திரன் கிரகணத்துக்குள் அகப்படுவது மிகவும் அரிது.

ஆனால் இன்று பவுர்ணமியாகும். அதே நேரத்தில் சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. பூமிக்கு அருகே தெரியும் முழு நிலவு கிரகணத்துக்குட்படுவதால் அது ரத்த நிறத்தில் சிவப்பாக தோன்றும். அதையே ’சிவப்பு நிலா’ அல்லது‘ரத்த நிலா’ எனவும் அழைக்கிறார்கள்.

அந்த அரிய ரத்த நிலா இன்று இரவு தோன்றுகிறது. கடந்த 33 ஆண்டுகளுக்கு பிறகு இது தோன்றவுள்ளது. இதை விட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் சாதாரணமாக பார்க்க முடியும். கண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை.

அமெரிக்கா / ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் வெறும் கண்களால் காண முடியும் மற்ற நாடுகள் அறிவியல் கோளரங்கள் வழியே இரவு 9:07 முதல் காண முடியும். அல்லது இந்த நாசா லைவ் ஸ்ட்ரீமில் காண முடியும் http://www.nasa.gov/…/live-feed-of-sundays-supermoon-eclips… இந்த பக்கத்தில் நான் சொன்ன அத்தனை விஷயத்தையும் விளக்க வீடியோ மூலம் காணலாம் மிஸ் பண்ணிட்டா 2033 தான் பாக்க முடியும்.

Let’s learn something – 41 What is Super Moon Eclipse and How it happens after so many years…….

error: Content is protected !!