அன்புள்ள பிரதமருக்கு..! – நீங்களே மோடிக்கு கடிதாசு எழுதலாம்!

அன்புள்ள பிரதமருக்கு..! – நீங்களே மோடிக்கு கடிதாசு எழுதலாம்!

மோடி பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னரும் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி, நண்பர்களுக்கு வாழ்த்துகள், கலந்து கொள்ளும் கூட்டங்கள், விருந்தினர்கள் சந்திப்பு என தன் ஒவ்வொரு நடவடிக்கையையும் ‘டுவிட்டர்’ வாயிலாக உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார். இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து வரும் பிரதமர் அலுவலகம் இன்னொரு முக்கிய நடவடிக்கையையும் எடுத்துள்ளது. ஆட்சிக்கு வந்து, ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, பிரதமர் அலுவலகத்தின் இணையதளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
modi loptop
ஏற்கனவே இருந்துவந்த வடிமைப்பு மற்றும் செயல்பாடுகள் அனைத்தையுமே மாற்றிவிட்டு, புதுமையாகவும், அதே சமயம், அனைவரும் எளிமையாக கையாளும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது. ஓராண்டு நிறைவு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்ட செவ்வாய்க்கிழமையே, இந்த புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இருந்தபோதிலும், இணையதளம் மாற்றியமைக்கப்பட்ட விவரத்தையும், நேற்று காலையில்,பிரதமர் தன் டுவிட்டர் வாயிலாக வெளியிட்ட பின்பே பலருக்கும் தெரியவந்தது.

மாற்றியமைக்கப்பட்ட இந்த இணையதளத்தில், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வகையில், ‘இன்ட்ராக்ட் வித் பி.எம்.,’ என்ற ஒரு பிரிவு உள்ளது. அதில், இரு பகுதிகள் உள்ளன. ஒன்றில், புதிய யோசனைகள், கருத்துகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம்; மற்றொன்றில், பிரதமருக்கு நேரடியாகவே இ – மெயில் அனுப்பும் வகையில்,’ரைட் டூ த பிரைம் மினிஸ்டர்’ என்ற புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது http://pmindia.gov.in/en/interact-with-honble-pm/. இதன்மூலம், முறைப்படி, யார் வேண்டுமானாலும், பிரதமருக்கு இ – மெயில் மூலம் கடிதம் அனுப்ப முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Narendra Modi Office Address : South Block, Raisina Hill, New Delhi-110011, India

Narendra Modi Office Phone Numbers : +91-11-23012312

Narendra Modi Office Fax Numbers : +91-11-23019545,23016857

Narendra Modi Official Website : www.narendramodi.in

Narendra Modi Residence Address : 7 Race Course Road, New Delhi

error: Content is protected !!