வதந்திகளுக்கு ஆப்பு! – மத்திர அரசிடம் வாட்ஸ் அப் பிராமிஸ்!

வதந்திகளுக்கு ஆப்பு! – மத்திர அரசிடம் வாட்ஸ் அப் பிராமிஸ்!

குழந்தைக் கடத்தல், ஆர்பாட்டம், கொலை என்பது போன்ற வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி அளித்துள்ளது.

நாட்டில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வாட்ஸ் அப் மூலமாக புரளிகளும், தவறான வதந்திகளும் பரப்பப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் பற்றிய வதந்தியால் சிலர் படுகொலை செய்யப்பட்டதும், பலர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளது.இதுபோன்ற சம்பவங்களால், வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், செல்போன் செயலியான வாட்ஸ்-அப்பை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து வாட்ஸ் அப் செய்தியாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதன் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதைக் கண்காணித்து தடுக்கும் வழிகள் குறித்து கூறும் நிபுணர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது. புரளி மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதைக் கண்காணிக்கவும், தடுப்பது குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இவர்கள் அளிக்கும் யோசனைகள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப் ரிசர்ச் அவார்ட் அறிவிக்கப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!