ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படனர்

ஜம்மு காஷ்மீர்ல் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் மாதத்தையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17ஆம் தேதி நிறுத்தி வைத்தது.
பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டும் வந்தது. மற்றபடி பெரும்பாலான நாட்களில்

பாதுகாப்புப் படையினர் அமைதி காத்துவந்தனர்.

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகள் மீண்டும் நேற்று தொடங்கின.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியதோடு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

error: Content is protected !!