இழிவு படுத்திய ஃபோர்டும் இனிமை செய்த டாட்டாவும்!

இழிவு படுத்திய ஃபோர்டும் இனிமை செய்த டாட்டாவும்!

ந்திய நிறுவனமான டாடா சொந்த காரை 1998 ல் உற்பத்தி செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக அதை விற்க முடிவு செய்தார் ரத்தன் டாடா. அதற்கான சந்திப்பு டெட்ராய்ட், அமெரிக்காவில் நடந்தது. அங்கு சென்ற ரத்தன் டாடாவிடம், உங்கள் தகுதிக்கு எல்லாம் கார் தயாரிப்பு எதற்கு என்று உதாசீனப்படுத்தி அசிங்கப்படுத்தினர். மனம் கலங்கிய டாடா, கோபப்படவில்லை, ஒரு உறுதி எடுத்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் விஸ்பரூபம் எடுத்தது டாடா. 2008 ல் டாடா சந்தித்த அதே தொழில் நசிவை 2008 ல் ஃபோர்ட் சந்தித்தது. அதனால் ஃபோர்ட் நிறுவனம் தனது லக்ஸூரி ஜாகுவார் காரை விற்க முடிவெடுத்தபோது அதை வாங்க முன் வந்தது வேறு யாருமல்ல அன்று அசிங்கப்பட்ட அதே டாடாதான். ஆனால் ஒரு தவறான வார்த்தை பிரயோகம் இல்லை. அதன் பின் ஜாகுவார், லேண்ட் ரோவர்களை மட்டும் விற்கவில்லை, டாடாவின் தொழில் நுட்பம் மிகச்சிறந்த உயரத்தை தொட்டது. இன்று இந்தியாவில் டாடா கார் விற்பனையில் ஒரு புதிய உச்சத்தை தொட்டது. மின்சார கார் உற்பத்தியில் ஒரு அசுர வேகத்தை ஆரம்பித்துள்ளது.

ஆனால் மறுபக்கமோ, ஃபோர்ட் நிறுவனம் மேலும் நசிவடைந்தது, அதன் இந்திய கார் விற்பனை மேலும் நசிந்து மூடும் நிலைக்கு வந்தது. அதை வாங்க யாருமே முன்வராத சூழல், அப்போது மீண்டும் உதவி செய்தது வேறு யாருமல்ல, அசிங்கப்பட்ட அதே டாடாதான்! எங்களுக்கு உதவியதற்கு நன்றி என்று ஃபோர்ட் மனமுறுகி சொன்னபோது, கனிவோடு உபசரித்தார்.

உயர்ந்தவர்கள், என்றுமே உயர்வோடு சிந்திப்பார்கள், அதனால்தான் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பர்! இன்னா செய்தாரை, அவர் நாண நன்னயம் செய்து விட்டார். ஆம், அதைக்கூட குத்தி காட்டவில்லை, குறை சொல்லவில்லை, அன்போடு செய்து முடித்தார்! அதனால்தான் இன்று அவர் உயர்ந்து நிற்கிறார்!

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!