இந்த ரசிகர்களை நினைத்தால்தான் கவலை!

இந்த ரசிகர்களை நினைத்தால்தான் கவலை!

மலுக்காக சனி, ஞாயிறுகளில் விடாமலும்.. மற்ற நாட்களில் அவ்வப்போதும் பிக் பாஸ் பார்த்துவந்தேன். எத்தனைச் சீண்டிப் பார்த்தாலும், கோபப்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடித்து கண்ணியத்தை பேச்சிலும், செயலிலும் காட்டி, அறம் வெல்லும் என்று முழங்கியவர் வெல்லவில்லை!

வரம்பு மீறாத, ரசிக்கும் குறும்புகளுடன், ஆரோக்கியமாக வாதங்களை வைத்த, அவர் திருநங்கை அல்ல.. பெண்தான் என்று எல்லோரின் மனங்களிலும் இயல்பாக ஏற்கவைத்த பிரதிநிதிப் பெண்மணியும் வெல்லவில்லை.

வாரா வாரம் சக போட்டியாளர்கள், கமல் மற்றும் பார்வையாளர்களிடம் கண்டனங்களைப் பெறுவதும், உணர்ந்துவிட்டதாக உருகி சனி, ஞாயிறில் மன்னிப்பு கேட்பதும், திங்கள் முதல் மீண்டும் தன் ஆவேச அலட்சியப் போக்கைத் தொடர்வதுமாக இருந்தவர் வென்றிருக்கிறார்.
சிலர் கொண்டாட..

பலரால் இந்த முடிவை மனப்பூர்வமாக ஏற்க இயலவில்லை. வென்றவருக்கு வாழ்த்து சொல்வதை விடவும் தோற்றவர்களுக்காக சமூக வலைத்தளங்களில் புலம்பும் பதிவுகளையே அதிகமாகப் பார்க்கிறேன் (கவிஞர் சல்மா உள்பட).

ஓட்டுக்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்த ஜனநாயகத் தீர்ப்பு என்பதே சானலின் நிலைப்பாடாக இருக்க முடியும்.

பாராட்டுகிறவர்கள் எல்லாம் அவர்களுக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுகிறீர்கள் என்று கமலும் லேசாக ஒரு க்ளூ கொடுத்தார்.

நாட்டின் தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களிலேயே சில சமயம் நம்பகத்தன்மையை கேள்வி கேட்டு நீதிமன்றங்களுக்குப் போகிறார்கள்.
அப்படி இருக்க.. இந்தத் தொலைக்காட்சியின் ஒட்டு சிஸ்டத்தின் நம்பகத்தன்மையையும் சில பதிவுகள் கேள்விகேட்டிருப்பதைப் படித்தேன்.
நான் அதற்குள் போகவிரும்பவில்லை. ரசிகர்கள் போட்ட ஓட்டுக்களின் தீர்ப்பே இது என்றே எடுத்துக் கொள்வோம்.

ஆனால் ரசிகர்களுக்கு நெகடிவ் ஷேட் குணாதிசயங்கள் கொண்டவர்களைத்தான் அதிகம் பிடித்திருக்கிறதா என்று யோசிக்கும்போது இந்த ரசிகர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.

இவர்கள்தானே நம்மை ஆள்கிறவர்களையும் ஓட்டுப்போட்டுத் தீர்மானிக்கிறார்கள்.

அறம் வெல்லும் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா?

பட்டுகோட்டை பிரபாகர்

error: Content is protected !!