இந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்!

இந்தியன் 2- ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து மூவர் பலி : பலர் காயம்!

பூந்தமல்லி அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலி. 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கிரேன் விழுந்து பலியானவர்களில் பிரபல கார்டூனிஸ்ட் மதன் சாரின் மாப்பிள்ளை கிருஷ்ணா வும் ஒருவர். அவர் இயக்குநர் சங்கரிடம் இப்படத்தில் உதவி இயக்குநராக களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார்.மதன் இளைய மகள் அமிதாவும், விபத்தில் பலியான கிருஷ்ணாவும் காதலித்து மணந்தவர்கள். இருவரும் இணைந்து பல விளம்பரங்களும், கார்பரேட் படங்களும் எடுத்துள்ளனர்.

இந்த கமல் & ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கியதில் இருந்தே ஸ்டார்டிங் ட்ரபிள் -தான்.. கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த லைக்கா புரடக்‌ஷனுக்கு கட்டம் மட்டுமில்லை வட்டம், சதுரம், லக்கினம் எதுவும் சரியில்லை போலிருக்குது

அடுத்தடுத்து தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் லைக்கா இந்த படத்தை எடுத்த முதல் ஷெட்டியூலே பிரேக் அப் ஆயிடுச்சு..

அதாவது கடந்த 18ம் வருஷம் ஜனவரி மூன்றாவது வாரத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் சில நாட்கள் கூட அது தொடரவில்லை. காரணம் கமலுக்கான ‘இந்தியன் தாத்தா’ கெட்-அப் மேக்-அப்பில் ஷங்கருக்கு திருப்தியில்லை, அதனால் ..மேக் – அப் டீமை மாற்றுவதற்காக சின்ன பிரேக்! என்றார்கள்.

சில நாட்கள் முடிந்த பின்னும் ஷூட் துவங்கவில்லை. கேட்டால் ‘புது மேக் – அப் மெட்டீரியலால் கமல்ஹாசனுக்கு முகத்தில் அலர்ஜி வருகிறது. எனவே மாற்று யோசனையில் இருக்கிறோம்!’ என்றார்கள்.

இப்படி இழுத்துக் கொண்டு போனதில் நாடாளுமன்ற தேர்தல் வைப்ரேஷன் துவங்கிட, கமல்ஹாசனும் தேர்தல் பணிகளில் மூழ்கிவிடார். பொது நிகழ்ச்சிகள், வேட்பாளர் தேர்வு என்று போய்க் கொண்டிருந்த கமல் ‘நானும் இந்த தேர்தலில் போட்டியிட போகிறேன்!’ என்று நெத்தியடியாய் அறிவிச்சதில் ஷங்கரை விட லைக்கா ஷாக் ஆயிடுச்சு..

அதனால் பல கோடி ஆரம்ப முதலீடு போட்டது போனாலும் பரவாயில்லை என்றெண்ணி இந்த இந்திய 2 படத்தையை கை விட முடிவு செஞ்சிடுச்சு..இந்த படத்திற்கு ஷங்கர் சொன்ன பட்ஜெட் கட்டுப்படி ஆகாததால் இந்த படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் பாதியிலேயே இந்த படத்தை கைவிட்டுவிட்டனர் என்று தகவல் இந்த வந்தது.

ஏற்கனவே கமல் நடித்த பல்ராம் நாயுடு திரைப்படம் பாதியிலேயே கைவிடபட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதே போல இந்தியன் 2 படம் கமலின் கடைசி படம் 2 கூறப்படுவதால் இந்த படமும் தடைபட்டு போய்விட்டதே என்று கமல் அப்செட் ஆனதால் விஜய் டி வி எக்ஸ் நிர்வாகி மகேந்திரன் தலையிட்டு வேறு சில ரூட்டில் ஃபைனான்ஸ் ரெடி பண்ணி லைகா பேனரிலேயே ஷூட் நடத்த ஆர்வப்பட்டு இப்போதைய ஷெட்டியூல் தொடங்கிச்சு..

இந்த ஷெட்யூலில் சென்னை கோஃப்ட்டை மாதிரியான செட்டில் இந்தியன் தாத்தா நுழைந்து விரல் வித்தைக் காட்டுவது போல் படமாக்க திட்டமிட்டிருந்த நிலயில் மூவர் பலி..

ஆக.. இனியும் இந்த இந்தியன் தொடருமா? தொடர வேண்டுமா? என்று லைக்கா யோசிக்குதாம்

error: Content is protected !!