மாற்று உடலுறுப்பு அறுவை சிகிச்சை ; தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்- ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு!

மாற்று உடலுறுப்பு அறுவை சிகிச்சை ; தொடர்ந்து தமிழ்நாடு முதலிடம்- ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு!

மனித உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 6வது முறையாகத் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இதற்கான மத்திய அரசின் விருதை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று பெற்ற நிலையில் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 12ந்தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அப்போதிலிருந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. கடந்த ஆகஸ்டு வரையில், தமிழ்நாட்டில் 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. ஏழை-எளிய மக்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.அந்த வகையில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5வது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.

அத்துடன் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளிலிருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

மனித உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6வது முறையாக தொடர்ந்து தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக, தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது. இதனை மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று வழங்கினார்.

இந்த விருதினை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் காணொலி காட்சி வாயிலாக பெற்று கொண்ட நிலையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் வகிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“உடல்உறுப்பு தானம் & உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதலிடம்” பெற்று மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாண்புமிகு அம்மா அரசின் சரித்திர சாதனைக்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் எனது பாராட்டுக்கள்! என்று, தெரிவித்துள்ளார். அது போல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரத்யேகமாக பார்ட்டி உள்ளார்

error: Content is protected !!