உலகில் 200 கோடி பேர் சாக்கடை & மலக்கழிவுகள் கலந்த சுகாதாரமற்ற நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தறாங்க!

உலகில் 200 கோடி பேர் சாக்கடை & மலக்கழிவுகள் கலந்த சுகாதாரமற்ற நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்தறாங்க!

உலகத்தில் நீரை மையமாக வைத்து மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்கள் பல : 1. இந்தியா, பாகிஸ்தான் இந்தி நதி விவகாரம் 2. இந்திய பங்களாதேஷ் கங்கை நீர் விநியோகம் 3.ஜோர்டான் ஆற்று நீருக்கான இஸ்ரேல் ஜோர்டான் போராட்டம் 4. நைல் நதி நீருக்கான எகிப்து சூடான் போர் 5. இந்திய மத்திய அரசு தமிழ் நாடு மாநில அரசு இடையேயான காவேரி ஆற்று நீர் பிரச்சினை. இப்படியான பல்வேறுவிதாமான முன் எச்சரிக்கையானது. நாட்டை ஆளுவோரையும் குடிமக்களையும் அச்சமடையச் செய்ததாகத் தெரியவில்லை.

water apr 16

ஆனாலும் தண்ணீருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு கோடிக்கணக்கான கேலன் நீர் வீணாவதையும் குறைந்துள்ளது என்றும் பொதுமக்கள் நீரைச் சேகரிப்பதிலும், உபயோகித்த நீரைச் சுத்திகரித்து திரும்ப பயன்படுத்துவதிலும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர் என்றும் தகவல் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனாலும் துரதிஷ்டவசமாக பல நாடுகளில் தண்ணீரின் தரம் குறைந்து பழுதடைந்து வருவது கவலைக்குரிய விஷயமாகும்
இப்போது கூட உலகில் 200 கோடி பேர் சாக்கடை மற்றும் மலக்கழிவுகள் கலந்த சுகாதாரமற்ற நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர் என்று உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்தியா, சீனா உட்பட 63 கோடி பேர் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கின்றனர். இது காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு இடமளிக்கிறது. உலகின் பல நாடுகளும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான இலக்கை அடைவதற்கான முயற்சிகளை செய்யவில்லை, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்வதில்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்த நாடுகள் தங்கள் பட்ஜெட்டில், பாதுகாப்புக்கான குடிநீருக்கான நிதிஒதுக்கீட்டை கடந்த மூன்று ஆண்டுகளில் 4 சதவீதம் அளவுக்கே உயர்த்தியுள்ளன. 80 சதவீத நாடுகளில் குடிநீர், கழிவறை மற்றும் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகஅளவில் சுகாதாரமற்ற குடிநீரால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறப்போர் எண்ணிக்கை 5 லட்சம் பேர் என்கிறார் உலக சுகாதார நிறுவன இயக்குனர் மரியா நீரா.

இந்தியாவில் 2012ம் ஆண்டு 5 வயதுக்கு குறைவான 87 ஆயிரத்து125 சிறுவர்கள் சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்துள்ளனர். 2015ல் சுகாதாரமான கழிவறைகளை பயன்படுத்துவோர் இந்தியாவில் 40 சதவீதமாக இருந்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!