இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை! -மக்களவைக் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை

இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை! -மக்களவைக் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை

16வது மக்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். மேலும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வானதற்கும் பிரணாப் வாழ்த்து தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக தெளிவான தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். 16-வது மக்களவை தொடர் பயனுள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 16வது மக்களவைக்கான தேர்தல், எதிர்பார்ப்பின் அடிப்படையில் நடைபெற்றதாகவும், நாட்டிற்கு நிலையான அரசு தேவைப்படுகிறது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். மேலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாக அமையும் என்று நம்பிக்கைத்தெரிவித்த அவ்ர்,”புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசில், லஞ்சத்திற்கு இடம் இருக்காது. மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அனைவருக்கும் வேலை வாய்ப்பு, உணவு, பாதுகாப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும், கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்க எடுத்து வருகிறது. கங்கை நதி தூய்மைபடுத்தப்படும்.” என்று கூறினார்.
president
மேலும் குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்:

#பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

#பாஜக அரசின் தாரக மந்திரம் ‘சிறிய அரசாங்கம் செம்மையான அரசாட்சி’ என்பதாக இருக்கும்.

#பொது விநியோகத் திட்டத்தில் மறு சீரமைப்பு கொண்டு வரப்படும்.
#வறுமையை குறைப்பதை இலக்காகக் கொண்டு புதிய அரசு செயல்படும்.

#அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும்.

#இந்திய எல்லையில் ஊடுருவலை தடுக்க அரசு முன்னுரிமை வழங்கும்.

#உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

#அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

#அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

#ஆந்திரா, தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகளை செய்யும்.

#விளையாட்டுத் துறை ஊக்குவிக்கப்படும். தேசிய விளையாட்டு திறன் கண்டறியும் மையம் அமைக்கப்படும்.

#பெண்களுக்கு எதிரான வன்முறையை அரசு பொறுத்துக் கொள்ளாது. பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க அரசு வழிவகை செய்யும்.

#மக்கள் உடல்நலத்தை பேணும் வகையில் தேசிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

#நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

#அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரையும் அரசு சரிசமமாக நடத்தும்.

#கிராமங்களில் குடிநீர், மின்சார பற்றாக்குறை சரி செய்யப்படும்

#4பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ‘சார்க்’ கூட்டமைப்பு நாடுகளுடனான நல்லுறவு மேலும் பலப்படுத்தப்படும்.

#நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொருளாதாரத்தை சீர் படுத்துவதே அரசாங்கத்தின் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை.

#நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும். வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்படும்.

#அதிவேக விரைவு ரயில் திட்டத்தை மேம்படுத்த ‘வைர நாற்கரம்’ திட்டம் செயல்படுத்தப்படும்.

#சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் சிறிய ரக விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

#அந்நிய முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

#பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

#அணுமின் நிலைய திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

#ஜப்பான், சீனாவுடனான நட்புறவு வலுப்படுத்தப்படும்.

#வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கப்படும்.

#சிறு துளி நீரும் பெரும் மதிப்படையது. நீர் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதான் மந்திரி கிரிஷி சஞ்சாய் யோஜனா செயல்படும்.

#இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை அமைக்கப்படும்.

error: Content is protected !!