எல்.ஐ.சி. ஹோம் பைனான்சில் ஜாப் இருக்குது!

எல்.ஐ.சி. ஹோம் பைனான்சில் ஜாப் இருக்குது!

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் பிரசித்தி பெற்றது பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. இதன் துணை நிறுவனம் எல்.ஐ.சி., ஹோம் பைனான்ஸ் லிமிடெட், வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இது 1989ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்.,நிறுவனத்தில் உதவியாளர் பிரிவில் 164 இடங்களும், உதவி மேலாளர் பிரிவில் 100 இடங்களும் என மொத்தம் 264 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் உதவியாளர் பிரிவில் தமிழகத்துக்கு 22 காலியிடங்கள் உள்ளன. உதவி மேலாளர் பணியிடங்கள் இந்திய அளவிலானது.
வயது : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2017 ஜூலை 1 அடிப்படையில் 21 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: உதவியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.உதவி மேலாளர் பதவிக்கு, எம்.பி.ஏ., படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இது தவிர 2 பதவிகளுக்கும் கூடுதலாக கம்ப்யூட்டர் அறிவு முக்கியம்.
தேர்ச்சி முறை: இரண்டு பதவிகளுக்கும் ஆன்லைன் முறையிலான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பக்கட்டணம் தலா 500 ரூபாய். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
 
பயிற்சிகாலம்: உதவியாளர் பணியில் சேர்பவர்கள் 6 மாதமும், உதவி மேலாளர் பதவியில் சேர்பவர்கள் 1 ஆண்டும் புரோபேஷன் அடிப்படையில் பணிபுரிய வேண்டும்.
விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 செப். 9
உதவியாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு: 2017அக். 10
உதவி மேலாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு 2017 அக்., 12
error: Content is protected !!