தமிழகத்தின் அடுத்த முதல்வர் சர்ச்சைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!

தமிழகத்தின் அடுத்த முதல்வர்  சர்ச்சைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!

இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வருவதை யொட்டி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களால் கட்சி உறுப்பினர்கள் பலத்த விவாதம் கிள்ம்பியது. . இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சுதந்திர கொண்டாட்டம் முடிந்த உடன், மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார். சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, தங்கமணி உள்ளிட்ட சிலர் ஒன்று கூடி சென்னை தலைமைச்செயலகத்தில் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். இ.பி.எஸ்., கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் . அதில், அதிமுக தலைமையின் ஒப்புதல் இன்றி யாரும் கருத்து கூறக்கூடாது என்றும், அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடங்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் தெரிவிப்பதை அதிமுகவினர் தவிர்க்க வேண்டும் என்றும், கருத்து பரிமாற்றத்தினால் எதுவும் சாதிக்கப்போவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உரிய நேரத்தில் தொண்டர்கள், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கட்சித்தலைமை சிறப்பான முடிவுகளை எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் கட்சியும், ஆட்சியும் வழி நடத்தியதுபோல் வருங்காலத்திலும் ஆட்சி நடத்துவோம் என்றும், தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்றுபட்டு கட்சிக்காக தொடர்ந்து உழைத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!