2019 வேர்ல்ட் கப் பற்றி இப்ப யோசிக்காதீங்கண்ணா! – தோனி

2019 வேர்ல்ட் கப் பற்றி இப்ப யோசிக்காதீங்கண்ணா! – தோனி

ஜிம்பாப்வே அணியுடன் மோதுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்த அணிக்கு தோனி தலைமை தாங்குகிறார்.

dhoni

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜிம்பாப்வே புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது தோனி கூறியதாவது: “எதிர்காலத்தில் நான் கேப்டன் பதவியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து என்னால் முடிவெடுக்க இயலாது. அதுகுறித்து பிசிசிஐ முடிவெடுக்கும்.இந்திய அணிக்கான பயிற்சியாளரைப் பொறுத்த வரையில், சிறந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பதவிக்கு மொழி ஒரு தகுதியே தவிர, அதுமட்டுமே தகுதியல்ல. எனவே, அந்த பொறுப்புக்கு வருபவர் வீரர்களை சரியாக புரிந்துகொண்டால் போதுமானது.

என்னைப் பொறுத்த வரையில் இப்போதே 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை இப்போதே கருத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளதால், அதை இலக்காகக் கொண்டே தயாராக வேண்டும்.
புதிய அணி: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கோலி, ரோஹித், தவன், அஸ்வின் என முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது புதிய வீரர்களுடன் விளையாட உள்ளதால் எனக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சில வீரர்களோடு முதல் முறையாக விளையாடுவதால் அவர்களைப் பற்றி விரைவாக நான் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.ஜிம்பாப்வே உடனான போட்டியைப் பொறுத்த வரையில், அந்த மண்ணில் டாஸ் வெல்வது முக்கியமான ஒன்று. ஒருநாள் போட்டியைப் பொறுத்த வரையில் டாஸ் முக்கியமான காரணி. எனவே, நமது முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற வேண்டியிருக்கும். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் உள்ளது என்று தோனி கூறினார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக 3 ஓருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 11 முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

Related Posts

error: Content is protected !!