விஜய் அவார்ட்ஸ் 2015! – ஐய்யோ..ஹைய்யோ!!

விஜய் அவார்ட்ஸ் 2015! – ஐய்யோ..ஹைய்யோ!!

விஜய் டிவி கடந்த 8 வருடங்களாக தமிழில் சிறந்த இயக்குநர், நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகின்றது. 2007’ஆம் ஆண்டில் இந்த‘விஜய் அவார்ட்ஸ்’ தொடங்கிய போது, அந்த விருதுகளில் கொஞ்சூண்டு நடுநிலைமையும் நேர்மையும் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த நடு நிலைமை மொத்தமாக மாறிப் போய், ஸ்டார் நடிகர்களை திருப்திபடுத்தும் விதமாகவே நடக்கிறது. இப்போதெல்லாம் விருதுக்கு சற்றும் தகுதி இல்லாத சிலரை தேர்ந்தெடுத்து அறிவித்து விட்டு இது மக்கள் தீர்ப்பு என்று கூறி அதை சப்பைக் கட்டும் போக்கு அதிகரித்துள்ளது.
vijay award 26
அந்த வரிசையில் இந்த வருடமும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நேற்று(ஏப்ரல் 25) நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருது விழாவில், 38 சிறந்தவர்களுக்கான விருதும், 5 ஃபேவரெட் பிரிவு விருதும் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் குழுவில், ஆர்.பால்கி, கே.பாக்யராஜ், யூ.கி.சேது, கே.வி. ஆனந்த் மற்றும் நடிகை நதியா போன்றோர் ஜட்ஜுகளாக இருந்தனர்.

ஆனால் இம்முறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் கெடுபிடி இறுகியதாலோ என்னவோ நேற்றைய விழாவில் பலரும் மனக் கசப்பை வெளியேற்றியப்படிதான் இடத்தைக் காலி செய்தனர்.

* விழாவுக்கு வேண்டி விரும்பி அழைத்த வி.ஐ.பி.களை வாசலில் நின்று வரவேற்ற விஜய் டி வி நிர்வாகிகள் இம்முறை மேடைக்கு வந்தவர்களை மட்டுமே பார்த்து ஸ்மைல் செய்தனர். இதனால் கமல் மகள் ஸ்ருதிஹாசனைக் கூட செக்யூரிட்டி நிறுத்தி பாஸ் கேட்டார்கள்.

* வருடந்தோறும் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது என்பது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பெரிய விருதாக கருதப்பட்டது. ஆனால் இம்முறை அந்த விருது யாருக்கு என்பதை அறிவிக்கவே இல்லை. அது தெரிந்து என்னவோ, இம்முறை விஜய், கார்த்தி, சூர்யா போன்ற டாப் ஹீரோக்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. நடிகர்களில் கமல், தனுஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆர்யா, ஜெயம் ரவி இருவருமே கலந்து கொண்டாலும் பாதிலேயே வெளியேறிவிட்டார்கள். முன்னணி நடிகைகளில் ஹன்சிகா, லட்சுமி மேனன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

* இது போன்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்வதில்லை. ஆனால், ‘செவாலியே சிவாஜி கணேசன் விருது’ வழங்குகிறோம் என்று பல தரப்பட்ட முயற்சிக்கு பிறகு இளையராஜாவை வற்புறுத்தி அழைத்து வந்தார்கள். “வந்தால் ஒரு மணி நேரம்தான் இருப்பேன். விருது வாங்கிவிட்டு கிளம்பிவிடுவேன்” என்று கூறி விட்டுதான் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர் வந்த சமயத்தில் அந்த விருது வழங்குவதற்கு சிவாஜி குடும்பத்தினர் மற்றும் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. இதனால் சிறிது நேரம் அமர்ந்திருந்த இளையராஜா, விருது வாங்காமலே கிளம்பிவிட்டார். இறுதிவரை சிவாஜி குடும்பத்தினர் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் யாருக்கு இந்த வருடம் செவாலியே சிவாஜி கணேசன் விருது என்பதையும் தேர்வுக்குழு அறிவிக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

* பல்வேறு நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று உரத்தக் குரலில் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வது விஜய் டிவி-யின் வழக்கம். அதுக்கேற்றார் போல் எப்போதுமே விஜய் அவார்ட்ஸ் என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதி வரை இருந்து உற்சாகமூட்டுவார். ஆனால், இம்முறை துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது (வாயை மூடி பேசவும்) கொடுத்து முடித்தவுடன், எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

அது மட்டுமின்றி “இந்த நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். அது வரைக்கும் குடிக்க தண்ணிக் கூட கொடுக்க மாட்டார்கள். அதுனாலே அடுத்த முறையும் வர தோணுச்சின்னா எல்லாரும் கையோட புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் கொண்டு வந்து விடுங்கள்” என்று மேடையில் நொந்து போய் கூறினார் சிவகார்த்திகேயன்.

error: Content is protected !!