உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில் தயாராகும் “மனிதன்” -ஷூட்டிங் ஸ்பாட் ஆல்பம்

உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில் தயாராகும் “மனிதன்” -ஷூட்டிங் ஸ்பாட் ஆல்பம்

“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் .அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”. “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்தி ருக்கும் இத்திரைப்படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.


இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். படத்தின் கலை இயக்குநர் செல்வகுமார் மற்றும் எடிட்டிங் மணிகண்ட பாலாஜி.

“படத்தின் கதாநாயகன் ஆரம்பத்தில் பல தவறுகள் செய்பவராக இருப்பதாகவும், பின்னர் மனம் திருந்தி நல்ல மனிதராக மாறிவிடுவார் என்றும் இதன் காரணமாக இந்த படத்திற்கு ‘மனிதன்’ என்ற தலைப்பு வைத்தால் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கருதி இந்த தலைப்பை வைத்ததாகவும் இந்த படத்தின் தலைப்பை ரஜினியின் ‘மனிதன்’ படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறைப் படி அனுமதி வாங்கி உபயோகிப்பதாகவும் முன்னர் தெரிவித்திருந்த இயக்குனர் .அஹமத் ” இது பெரும்பாலும் .உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமுக அக்கறையுடன் எடுக்கப் பட்டுள்ளது மனிதன் திரைப்படம். படத்தின் பாதி நீதிமன்றத்தை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரம் மாண்டமான முறையில் நீதிமன்ற வளாகமும், சென்னையிலுள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்ட தெருவும், அதில் தினமும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும், முன்னணி நடிகர்கள், நடிகைகளையும் கையால்வது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படபிடிப்பு சென்னை, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

Related Posts

error: Content is protected !!