தறி கெட்ட நிர்வாகத்தின் குறியீடு: தெரு நாய்களும் சொரணை கெட்ட அரசின் மெத்தனமும்!

தறி கெட்ட நிர்வாகத்தின் குறியீடு: தெரு நாய்களும் சொரணை கெட்ட அரசின் மெத்தனமும்!

டித்த தோல் கொண்ட சொரணை கெட்ட அரசாங்கம் இது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்குத் தெரு நாய்கள் விவகாரம் ஒரு சிறப்பான உதாரணம். தெருநாய்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் கடிப்பது, ஆடு கோழி போன்ற எளிய மனிதர்களின் வளர்ப்பு உயிரினங்களைக் கடிப்பது போன்றவை இந்திய அளவில் இருக்கிற பிரச்சினை. இந்திய அளவில் மாடுகள் தெருவில் அலைவது அதை விட பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாம் கல்வியறிவு பெற்ற மாநிலம் அல்லவா. இதை எப்படி எதிர்கொண்டோம். நாய் விரும்பிகள், நாய் எதிர்ப்பாளர்கள் என்று இரண்டு நாயத்தரப்பை மோத விட்டு, உண்மையிலேயே மொத்து வாங்க வேண்டிய அரசாங்கத்தைத் தப்பிக்க வைத்து சொப்பன ஸ்கலிதம் அடைந்தோம்.

ஒரு சீரியஸான விவாதத்தில், வெகு மக்கள் பங்கேற்பு என்பது அரசிற்கு பதில் சொல்ல வேண்டிய அழுத்தத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இங்கு என்ன நடந்தது? விவாதம் மொத்தமும் உணர்வுத் தளத்திலேயே நடந்தது. இதற்குப் பொறுப்பு கூர வேண்டிய அரசு தந்திரமாக தப்பித்துக் கொண்டது.இந்த நாய்க்கடி விவகாரம் கொதிநிலையை எட்டியிருந்த சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து, அரசு ஏதாவது உருப்படியான நடவடிக்கை எடுத்து நீங்கள் பார்த்தீர்களா? எங்கள் பஞ்சாயத்தில். பக்கத்தில் இருக்கும் திருபுவனம் நகராட்சியில், கும்பகோணம் மாநகராட்சியில் எங்குமே நான் ஒரு நாய் வண்டியைக் கூடப் பார்க்கவில்லை. மக்கள்தான் அவதி அவதியாகப் பேசிவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போகிறார்கள். அது அப்படித்தான் இருக்க முடியும். ஆனால் ஒரு அரசு அப்படி இருக்க முடியுமா?

இந்த அரசின் பிரதான தோல்வி என்பது, அரசு ஊழியர்களை, அதன் துணை அமைப்புகளை அவர்களின் பொறுப்பு கூறும் தன்மையில் இருந்து விடுவித்ததுதான். யாருக்கும் எதன் மீதும் பொறுப்பு இல்லாத ஒரு தறி கெட்ட அரசாங்கத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை. எல்லாவற்றையும் மந்திரிகள், MLA க்கள் தங்களது PR வொர்க் மூலமே சரி செய்துவிடுவார்கள் என்று அரசு எந்திரம் நம்புகிறது. எந்த அரசு மாறினாலும் சரி, சில நிர்வாக அலகுகள் அதன் பாட்டுக்குத் தன் வேலையை செய்து கொண்டிருக்கும். அப்படி ஒன்றுதான் இந்த நாய்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புகள்.அவற்றை இந்தக் கையாலாகாத அரசாங்கம் சீரழிய விட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதும் நிலைமை கொஞ்சம் சிக்கலானது. அப்படியான நேரங்களில் அரசுத் தலையிட்டு அதை சீர் செய்யாமல் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டது. நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் அவற்றிற்கு கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடவேண்டும் என்பது நீதிமன்றத்தின் வழிகாட்டல். இது போக டெல்லியை மையமாக வைத்து வழக்கு வரவும், இந்திய அளவில் என்ன கொள்கைத் திட்டம் வகுத்திருக்கிறீர்கள் என்று உச்சநீதி மன்றம் எல்லா மாநிலங்களுக்கும் கேள்வி கேட்டது. நம் வெண்ணை வெட்டி தமிழக அரசாங்கம் அதற்கு பதிலே சொல்லவில்லை. எரிச்சலடைந்த உச்சநீதி மன்றம், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், அரசு இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்தால், இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதி தன் பக்கத்து நியாயங்களை எடுத்துக் கொண்டு நீதி மன்றத்துக்கு ஓடியிருக்க வேண்டுமா இல்லையா? காரிய சாத்தியம் உள்ள ஒரு வழிமுறையை வகுத்துக் கொண்டு அதை நீதி மன்றத்தில் சமர்ப்பித்து ஒரு ஏற்பை உருவாக்க விழையுமா இல்லையா? இது எதுவுமே நடக்கவில்லை.இந்த மெத்தனம் ஏன் நிகழ்கிறது என்றால் நிர்வாகத் திறன் அற்ற அரசியல் தலைமை, அரசு அதிகாரிகளின் பின்னால் ஒளிந்து கொள்வதால்தான். தனது பொறுப்புகளை தட்டிக் கழிப்பதால்தான். நிர்வாகத்தில் இத்தனை சோம்பலான ஒரு அரசு இருக்க முடியுமா என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில், இருக்கும் பொறுப்புகளையே கையாள முடியாமல் புதிய புதிய PR பொறுப்புகளை அவர்கள் மீது சுமத்துகிறது இந்த அரசு. உங்களுடன் ஸ்டாலின் போன்றவை எல்லாம் அத்தகைய டுபாக்கூர் வேலைகள்தான். அரசில் பணியாற்றுகிற இயல்பூக்கமுள்ள பணியாளர்கள் demoralize ஆகியிருக்கிறார்கள். அதுவே இந்த அரசின் சாதனை. ஒரு பக்கம் கட்டுக்கடங்காத ஊழல். இன்னொரு பக்கம் அதன் வழக்கமான நிர்வாக நடைமுறை படுபாதாளத்தில் கிடக்கிறது.

ஒரு விஷயத்தில் இந்த அரசு ஷார்ப்பாக இருக்கிறது என்றால் அது இந்த அரசுக்கு இருக்கும் பண வெறி. அது அச்சமூட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஸ்டாலின் அரசாங்கத்தைப் பற்றி ஒரு வரியில் வரையறுக்க வேண்டும் என்றால் இதுவொரு அதீத பணவெறி கொண்ட லும்பன் கும்பல். தமது பணவெறியை விளம்பர மோகத்தில் பொதிந்து வைத்துக் கொண்டு கூத்தாடும் சிறுவர்களின் அரசாங்கம் இது.

காரல்மார்க்ஸ் கணபதி

error: Content is protected !!