இந்தியாவில் இந்தாண்டு நடக்கப் போகுது உலக அழகி போட்டி!

இந்தியாவில் இந்தாண்டு நடக்கப் போகுது உலக அழகி போட்டி!

2023 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1951 ஆம் ஆண்டு முதல் உலக அழகி (MISS WORLD) போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தாண்டுக்கான உலக அழகி போட்டி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதனை உலக அழகி போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “2023 ஆம் ஆண்டுக்கான 71வது உலக அழகிப்போட்டி வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி 30 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொள்கின்றனர்” என்றார்.

இதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் இந்தப் போட்டியில் பங்கேற்கும் மிஸ் இந்தியா வேர்ல்ட் சினி ஷெட்டி, “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சகோதரிகளை சந்திப்பதற்கு உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவேன்” என்றார்

இந்த நிலையில், இந்த ஆண்டு 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இந்தியாவில் தங்களின் தனித்துவமான திறமைகள், புத்திசாலித்தனம் மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்துவார்கள். திறமைகளை வெளிப்படுத்துதல், விளையாட்டு சவால்கள் மற்றும் தொண்டு முயற்சிகள் உள்ளிட்ட கடுமையான போட்டிகளின் தொடரில் அவர்கள் பங்கேற்பார்கள். நவம்பர்/டிசம்பர் 2023 இல் திட்டமிடப்பட்ட கிராண்ட் பைனலுக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக பங்கேற்பாளர்களை ஷார்ட்லிஸ்ட் செய்ய பல சுற்றுகள் இருக்கும்.

error: Content is protected !!