இதுதான்யா அசெம்பிளி! – மரத்தடியில் திமுக எல் எல் ஏ-கள் ட்ராமா!

இதுதான்யா அசெம்பிளி! – மரத்தடியில் திமுக எல் எல் ஏ-கள் ட்ராமா!

தலைமைச் செயலக வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தி முடித்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “இன்று மீண்டும் எதிர்க்கட்சி தலைவருடைய அலுவலகத்திற்கு வரமுடியாத அளவிற்கு, 4-ம் எண் வாயிலை பூட்டி வைத்திருக்கிறார்கள். எனவே, எங்களுடைய அறைக்கு செல்ல முடியவில்லை. அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தை எங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மணி நேரம் நாங்கள் நடத்தியிருக்கிறோம்.

tn assemblu aug 20

எங்களுடைய எதிர்க்கட்சி துணைத்தலைவர் சபாநாயகராக இருந்து அந்த சபையை நடத்தியிருக்கிறார். எந்த வித கேலியோ, கிண்டலோ அல்லது தனிப்பட்ட முறையில் யாரையாவது விமர்சித்து பேசவோ கூடாது என்கின்ற நிலையில், மக்கள் பிரச்சினைகளை மாத்திரம் பேசிட வேண்டும், ஒரு சட்டமன்றம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, நாம் நடத்தக்கூடிய இந்த மாதிரி சட்டமன்றத்தை நடத்திட வேண்டும் என்று முன்கூட்டியே எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்டாயமாக ஒரு உத்தரவு போட்டு, அந்தவகையிலே இந்த கூட்டத்தை நடத்தியிருக்கிறோம்.

எங்களை ஒரு வார காலம் நீக்கியதை கண்டிக்கின்ற வகையில், நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலையிலே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. திங்கட்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக செய்தியும் வந்திருக்கிறது. மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதை தலைவர் கருணாநிதியுடன் கலந்து பேசி நாங்கள் முடிவெடுப்போம்.”என்றார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காவல்துறை மானியத்தன்று இதே போன்ற தர்ணா நடக்குமா?.

பதில்:- காவல்துறை மானியக் கோரிக்கையன்று நாங்கள் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். வேண்டுமென்றே, திட்டமிட்டு எங்களை காவல்துறை மானியத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, நாங்கள் மட்டுமல்ல இந்த நாடே இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறது. திட்டமிட்டு இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது இதுபோல எத்தனையோ முறை, பல்வேறு நடவடிக்கைகள் எல்லாம் சபையில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்போது சட்டசபையில் இருக்கக் கூடியவர்கள், வெளியில் இருக்கக் கூடிய தலைவர்கள் குரல் எழுப்புகின்றபோது, உடனடியாக தலைவர் கருணாநிதி அதை மறுபரிசீலனை செய்து, தண்டனையை குறைத்து மீண்டும் அழைத்து இருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்திருக்கின்றன.

அதுமட்டுமல்ல, ஒருமுறை துணை முதல்-அமைச்சராக இருந்த நான், சில அமைச்சர்களை எல்லாம் அழைத்து, வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. உறுப்பினர்களை, எதிர்க்கட்சி உறுப்பினர்களை எல்லாம் அழைத்துவர வேண்டும், அவர்களை சமாதானம் செய்திட வேண்டும், தவறுக்கு வருந்துகிறோம் என்று கூட சொல்லி அழைத்து இருக்கிறோம். இதெல்லாம் கடந்த கால தி.மு.க. வரலாறு. கருணாநிதியினுடைய வரலாறு. ஆனால், இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவிடம் அப்படி எதிர்பார்ப்பது பெருத்த ஏமாற்றம் தான்.

கேள்வி:- இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை தவிர மற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்பார்களா?.

ஆமாம்.கண்டிப்பாக கலந்து கொண்டு எங்கள் தர்ப்பு நியாயத்தை வலியுறுத்துவார்கள்

error: Content is protected !!