நவீன மைசூர் அரசின் தந்தை & கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விசுவேஸ்வரய்யா!

நவீன மைசூர் அரசின் தந்தை  & கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விசுவேஸ்வரய்யா!

மோக்சகுண்டம். விசுவேஸ்வரய்யா , 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிங்கபல்லபுரா (கோலார் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு) மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

பதினைந்து வயதில் தந்தையை இழந்த விசுவேஸ்வரய்யா , தன்னுடைய ஆரம்ப கல்வியை சிங்கபல்லபுராவிலும், உயர் கல்வியை பெங்களூரிலும் பயின்றார்.

1881 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்த அவர், பின்னர் தன்னுடைய கட்டடப் பொறியியல் கல்வியை “புனே அறிவியல் கல்லூரியில்” முடிச்சார்.

பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா பாம்பே பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்பு இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார். இவர் தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார்.

1903 இல் புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது. இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்புகுவாலியருக்கு அருகில் டைக்ரா அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறுவப்பட்டது.

வெள்ளத்தில் இருந்து ஐதராபாத் நகரை பாதுகாக்க வெள்ள தடுப்பு முறை அமைப்பை வடிவமைத்தது இவருக்கு அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது. விசாகப்பட்டிணம் துறைமுகத்தை கடல்அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்க இவர் காரணமாகவிருந்தார். [5]

விசுவேசுவரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை திட்டக்கருத்து உருவாக்கத்திலிருந்து திட்டம் முடியும் வரை மேற்பார்வையிட்டார். இவ்வணை உருவாக்கிய நீர்த்தேக்கம் அச்சமயத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருந்தது.[6] 1894 ல் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரணமானார்.

இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார்.

நூறு வயத்திற்கும் மேல் வாழ்ந்து அதுவும் தொடர்ந்து பாடுபட்டு வந்த எம். விஸ்வேஸ்வரய்யா 1962 ஆம் ஆண்டு, இதே ஏப்ரல் 14 ஆம் தேதி தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார்.

error: Content is protected !!