ராகுல்: ஓர் அரசியல் தலைவனல்ல, மீட்சிப் பயண பிரதிநிதி!
ராகுல் காந்தியின் பயணத்தில் இன்று திரளும் கூட்டம், வெறும் நடிகரையோ அல்லது பிரபல முகத்தையோ பின் தொடரும் ஆரவாரமல்ல. இது, இந்தியாவின் ஆன்மாவை மீட்கத் துடிக்கும், மதச்சார்பின்மையை (செக்யூலரிசம்) மீண்டும் பூக்கச் செய்யத் தங்களைத் தியாகம் செய்யத் துணியும் ஓர் உன்னதக் கூட்டம். நேற்று மனவலியுடன் பேசிய உள்ளத்து உயர்ந்தவர்கள், அவருடன் களத்தில் நிற்பது வெறும் அரசியல் லாபத்திற்காக அல்ல; அது ஒரு கொள்கைக்கான தீராத தாகம்.
காங்கிரஸ் எனும் பேரியக்கத்தில், பணம், பதவி என்ற ஒற்றை நோக்குடன் எளிதாக இடம் மாறத் தயாராக இருக்கும் “பெருச்சாளிகள்”—அதாவது, உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் சங்கிகள்—இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. இவர்கள்தான் பதவிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். இந்தக் குணம் ஆளும் கட்சியான பி.ஜே.பி-யிலும் வேறு வடிவில் உள்ளது. அங்கு, பக்தி மற்றும் மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம் ஒன்று உள்ளது. ஆனால், ஓட்டை திருடிய கூட்டம் ஒன்றுக்கு இந்த “மாக்கள்” ராமர் என கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நிலை இருக்கிறது. நம்மிடம் சாட்டையில் அடித்துக்கொண்டு, வெறுங்காலுடன் நடந்து நாடகமாடிவிட்டு, அடுத்த நாளே ஆயிரக்கணக்கான கோடி முதலீட்டில் வியாபாரம் செய்யும் தலைவர்களைக் கொண்ட கட்சியாக அது இருக்கிறது. அங்கும் காசு பார்க்கத்தான் செல்கிறார்கள். அவர்களை நம்பி நடுரோட்டிற்கு வந்த திறமையாளர்களும், செலவு செய்து எல்லாவற்றையும் இழந்தவர்களும் உள்ளனர்.

அரசியல் களத்தில் உள்ள உண்மை யாதெனில், கட்சியின் பேனர்களுக்குப் பின்னால், தலைவர்கள் அனைவரும் நட்புடன் இருக்கிறார்கள்; சிக்கல்களைப் பேசுகிறார்கள். வெளியுலகில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், திறமையானவர்களை எல்லா தலைவர்களும் தன்பக்கம் இழுக்கவே பார்க்கிறார்கள். ஆனால், காசுக்கு ஆசைப்படும் திறமையாளர்கள், அக்கட்சியின் மாயைக்குள் விட்டில் பூச்சியாய் வீழ்ந்துவிடுகிறார்கள்.
ஆனால், ராகுல் காந்தி என்ற மனிதத்தின் முன், இந்த எளிய கணக்குகள் செயலிழக்கின்றன. அவரை நீங்கள் சாதாரண சூழ்ச்சிகளால் எதிர்கொள்ள முடியாது. அவருக்கு எதிராய் வழக்கு கூட தொடர முடியாத அளவுக்குச் சட்டத் திருத்தம் செய்து, தேர்தல் ஆணையம் முதல் துணை ராணுவம் வரை வேலை செய்த பின்னரும், அவர் சொல்வதை பொய் என அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. கண்ணுக்கு எதிரே ஆளுங்கட்சியாக இருக்கும்போதே, ஐந்து கோடி படிவங்கள் ‘SIR’ (உள்துறை அமைச்சகத்துக்கு) கொடுத்ததாய் பகிரங்கமாகப் பேசுகிறார்கள். பட்டப்பகலில், பச்சை பொய்களை அவிழ்த்து விடத் தயங்குவதே இல்லை.
இப்படிப்பட்ட பேராபத்தை ராகுல், ஒற்றை ஆளாய், நிஜமான ‘ஐம்பது இன்ச்’ நெஞ்சுரத்துடன் எதிர்கொள்கிறார். கடந்த நான்காண்டுகளாய், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மக்களை மட்டும் அவர் தொடர்ந்து சந்திக்கிறார். அவருக்குப் பிரதமர் பதவி மீதோ, பணத்தின் மீதோ பற்று இல்லாமல், ஒரு ஜென் மனநிலையை நாம் கவனிக்கிறோம். அவருக்குத் தேவை கொள்கை மட்டுமே. மக்களை “மாக்களாக” மாற்றும் இந்துத்வம் / மத அரசியல் ஒழிந்து, மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனை மட்டும்தான் அவரிடம் உள்ளது.
ஒரு சாதாரண பின்புலத்தைச் சேர்ந்த ஒருவர், நேரில் அவரிடம் உரையாடி, தனது புத்தகத்தை அவரைக் கொண்டு வெளியிட ஒரு வருடம் காத்திருந்து, புல்வாமாவில் அவரைச் சந்தித்ததைப் போல், கொள்கைக்கான உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. நேரடிச் சந்திப்பும் உரையாடலும் இல்லாமல் ஒருவரைத் தலைவராக எழுத முடியாது என்ற எழுத்தின் உண்மையை அவர் நிலைநாட்டுகிறார்.
ஆம், எங்களுடன் இணையும் எவருக்கும் தோல்விதான் என்பதை உணர்ந்துதான் பயணிக்கிறோம். எங்களைக் குறி வைத்து தோற்கடிப்பார்கள். நூறு முறைக்கு மேல் தோற்போம். அதனாலென்ன? (So what?) நாங்கள் பயணிப்பது மக்களுக்காக. திரும்பவும் பூஜ்ஜியத்தில் இருந்து எழுவோம்! பூப்போம்! மலர்வோம்! மரமாவோம்!
இந்தியா ஜெயிக்கும்! கொள்கையே ஜெயிக்கும்!


